கதை கதையாம் காரணமாம்... 2

வயதுக்கேற்ற கதைகள்!

குழந்தைகளின் க்ளோஸ் ஃப்ரெண்ட் யார் தெரியுமா? பக்கத்து வீட்டு ஆகாஷோ, எதிர் வீட்டு தீக்ஷிதாவோ இல்லை. இவர்கள் எல்லோரையும்விட அவர்களுக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட்... கதை.

நம்பிக்கை இல்லையா? உங்கள் குழந்தை ஆகாஷிடமும் தீக்ஷிதாவுடனும் பேசும்போது தூரத்திலிருந்து கவனித்துப் பாருங்கள். அது தன் பிஞ்சுக் கைகளை ஆட்டி ஆட்டி, தரையைத் தட்டி, பலவித முகபாவனைகளோடு ஏதேனும் ஒரு கதையைத்தான் சொல்லிக்கொண்டிருக்கும். வயதை மறந்து குழந்தைகள் உலகத்துக்குச் செல்ல ஆர்வமிருந்தால், ஒருமுறை அந்தக் கதை சொல்லலில் இணைந்துகொள்ளுங்கள். நீங்கள் துணி துவைத்தபோது நகர்ந்து சென்ற சோப்புநுரையில் உருவான கதையாக அது இருக்கலாம்; பள்ளிக்கு அவர்களை வண்டியில் அழைத்துச் சென்றபோது எதிரே வந்த பெரிய லாரி அந்தக் கதையிலும் வரலாம்; பாட்டி வீட்டில் மொட்டை மாடியில் நின்று பார்த்து விமானம் பற்றிய சயின்ஸ் ஃபிக்‌ஷன்கூட உருவாகிக்கொண்டிருக்கலாம். குழந்தைகள் தாம் கவனிப்பதை எல்லாம் கதையாக மாற்றிவிடும் வரமான மனதுக்காரர்கள். அவர்களின் இந்த ஆர்வத்தை மேலும் வளர்த்தெடுக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்