எந்தப் பெண்ணும் ஆதரவற்றவள் அல்ல!

‘என்னால் ஏற்றம்பெற்ற என் குடும்பம்’!

அவள் விகடன் 18-ம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்தப் பட்ட 18 பவுன் தங்கம் மெகா பரிசுப் போட்டிகளில், ‘என்னால் ஏற்றம்பெற்ற என் குடும்பம்’போட்டியில் (போட்டி எண் - 13) வெற்றிபெற்ற,காஞ்சிபுரத்தைச் சேர்ந்த உமா, தன் வாழ்க்கைப்பயணக் குறிப்புகளை இங்கே பகிர்கிறார்...

ருமபுரி மாவட்டம், பி.குறிஞ்சப்பட்டி கிராமம், என் சொந்த ஊர். அப்பாவுக்குக் கூலி வேலை. வீட்டில் ஐந்து பெண் பிள்ளைகள். நான்தான் மூத்தவள். 17 வயதில் திருமணம் நடந்தது. என் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டபோது எனக்கு 19 வயது. கையில் 11 மாத ஆண் குழந்தை, வயிற்றில் இரண்டு மாத சிசுவுடன் நிராதரவாக நின்றேன். கணவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் எங்கள் வீட்டுக்கு வெளியே ஏதோ ஒன்று என்று அறிந்தாலும், அது என்னவென்று இதுவரை உறுதியாகத் தெரியவில்லை எனக்கு.

புகுந்த வீட்டில், ‘வயித்துல இருக்கிறது பையனா பொறந்தா, ரெண்டு பேரனுங்க பேர்லயும் சொத்தெழுதி வைக்கிறேன்’ என்றார்கள். பிறந்தது பெண் குழந்தை. அதற்காக வாங்கிய வசவுகள் கொஞ்சநஞ்சம் அல்ல. சொத்தும் இல்லை... பத்தும் இல்லை என்றாகிப் போனது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்