Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

70 வயது... 83 பதக்கம்!

சக்சஸ் ஸ்டோரி

சாதனைக்கு வயதில்லை என்பார்கள். அதற்கு எனர்ஜெடிக் உதாரணம்... கோவையைச் சேர்ந்த அத்லெட், லட்சுமி லோகநாதன். 57 வயதில் மூத்தோர் அத்லெட்டிக் போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தவர்... மாவட்ட, மாநில வெற்றிக்கோடுகள் தாண்டி, இப்போது தேசிய அளவு போட்டிகள், சர்வதேச போட்டிகள் என்று கலக்கிக்கொண்டிருக்கிறார்... 70 வயதில்!

‘‘நான் பிறந்து, வளர்ந்தது திருப்பூர். அப்பா விவசாயி. சின்ன வயசில் ஹை ஜம்ப், லாங் ஜம்ப், த்ரோ ஃபால்னு விளையாட்டில் ரொம்ப ஆர்வமா இருப்பேன். ஸ்கூல்ல தேசிய மாணவர் படையின் கேப்டனாவும் இருந்தேன். பள்ளி அளவில் விளையாட்டில் அதிக பரிசுகள் வாங்கியிருந்தாலும்... வெளி மாவட்ட, வெளி மாநில போட்டிகளில் கலந்துக்கிற வாய்ப்புகள் கிடைத்தபோதும் வீட்டில் என்னை அனுமதிக்கல. தகுதி, ஆர்வம், முயற்சி எல்லாம் இருந்தும் என் மைதானக் கனவுகள் அப்படியே புதைஞ்சுபோச்சு.

ஸ்கூல் முடிச்சதும் கல்யாணம். என் கணவர் லோகநாதன்தான் என்னோட செகண்ட் ஹாஃப் வெற்றிகரமா அமையக் காரணம். அந்த அளவுக்கு என்னை ஆக்கபூர்வமா செயல்பட வெச்சார். திருமணத்துக்குப் பின் பி.யு.சி முடிச்சேன். சென்னை ஒய்.எம்.சி.ஏ காலேஜ்ல ஒரு வருட விளையாட்டு கோர்ஸ் முடிச்சேன். வால்பாறையில், அரசுப்பள்ளியில பி.டி.மாஸ்டரா வேலையில் சேர்ந்தேன்.அடுத்தடுத்து பல பள்ளிக ளில் பி.டி. மாஸ்டரா வேலைபார்த்திருக்கேன். நிறைவேறா மல் போன என் விளையாட் டுக் கனவுகளை, என் ஸ்டூடன்ட்ஸை பெரிய பிளேயர்களா வார்த்தெடுத்ததன் மூலம் திருப்திப்படுத்திக்கிட்டேன்.அவங்கள்ல பலர் இப்போபெரிய நிலையில் இருக் கிறதைப் பார்க்கிறது, என்னோட பெரிய சந்தோஷம். பி.டி மாஸ்டரா வேலை பார்த்துட்டே டிகிரி படிக்க ஆரம்பிச்சு, ஆறு டிகிரிகள் முடிச்சேன். போன வருஷம் கோவை கற்பகம் யுனிவர்சிட்டியில பிஹெச்.டி முடிச்சு, ‘டாக்டர் லட்சுமி லோகநாதன்’ ஆகிட்டேன்...’’

- ஒரு பத்தி நிறைய லட்சுமி வெற்றிகள் நிரப்பிப் பேசியதில் வியந்துபோனோம்.

‘‘34 வருஷ பி.டி மாஸ்டர் பணி அனுபவத்தோட, 2003-ல் விருப்ப ஓய்வு எடுத்துக்கிட்டேன். அதன் பின் என்னோட அத்லெட் கரியரைத் தொடங்கினேன். ஒரு பிளேயரோட ஏக்கம், இன்னொரு பிளேயருக்குதானே தெரியும்?! அப்படி என்னை ஊக்குவித்த பிளேயர், அத்லெட்டான என் கணவர். நேஷனல் லெவல் பிளேயர். கோவை சி.ஐ.டி கல்லூரியில் ஃபிஸிக்கல் டைரக்டரா இருந்தவர்.

2003-ம் வருஷம், கோவை மாவட்ட அளவிலான மூத்தோருக்கான அத்லெட் போட்டிகளில், 55 - 60 வயதுப் பிரிவில் நான் கலந்துகொண்டு வாங்கின முதல் தங்கம், எனக்குள்ள நம்பிக்கை விதையை ஆழமா ஊன்றியது. மூத்தோருக்கான போட்டிகள் என்பது 35 வயதில் இருந்து ஆரம்பமாகி, ஒவ்வொரு ஐந்து வயதுப் பிரிவுக்கும் நடத்தப்படும் கோவையில மாவட்ட அளவில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து மாநில, தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்துகிட்டு தங்கம் வாங்கினேன்.அப்படியே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைநடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டி களில் கலந்துகிட்டேன். தாய்லாந்து நாட்டில்நடைபெற்ற 15-வது ஆசியப் போட்டியில், ரெண்டு தங்கம், ஒரு வெண்கலம் வென்றது மறக்க முடியாத அனுபவம்'' என்று புன்னகையுடன் சொல்லும் லட்சுமி, மாவட்ட, மாநில, தேசிய, ஆசிய, ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு இதுவரை 50 தங்கம், 17 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளார்.

‘‘குறிப்பா, 2010-ல் சண்டிகர்ல நடந்த தேசிய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியில் கலந்துகொண்டப்போ, காலில் பெரிய அடி. ஒரு வருஷம் பெட் ரெஸ்ட்ல இருந்தேன். ‘இனி நீங்க விளையாடக்கூடாது, மீறினா நடக்கக்கூட முடியாத நிலை ஏற்படும்’னு டாக்டர்ஸ் சொன்னாங்க. நான் தொடர்ந்து பயிற்சி எடுத்தேன், போட்டிகளில் கலந்துக்கிட்டேன். நானும், என் காலும் நலம். பலம் என்பது உடலைவிட மனசில்தான் அதிகமிருக்கு’’ என்று அசத்தியவர், வரும் மே மாதம் சிங்கப்பூரில் நடக்கவிருக்கும் ஆசியப் போட்டிகளில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

என்னோட அன்புக்குரிய ரசிகர்கள், கோவை மக்கள்தான். என்னை எங்க பார்த்தாலும், பாராட்டிட்டே இருப்பாங்க. 

பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்... இந்த நூற்றாண்டிலாவது பெண் பிள்ளைகளை அவங்க இலக்கை நோக்கி சுதந்திரமா முன்னேற விடுங்க. அவங்க பெற்றுவரும் வெற்றிகள், நிச்சயம் உங்களைப் பூரிக்க வைக்கும்!’’

- விடைபெற்று, கிரவுண்டில் தடதடக்கிறார் 70 வயது லட்சுமி!

சீனியர் பிளேயருக்கு சூப்பர் சல்யூட்!

கு.ஆனந்தராஜ், படங்கள்:த.ஸ்ரீநிவாசன்


லட்சுமியின் ஃபிட்னஸ் சீக்ரெட்!

தினமும் காலை - 3 இட்லி மற்றும் நறுக்கிய பழத் துண்டுகள்.

மதியம் - கீரை, பச்சைக் காய்கறிகள் அடங்கிய அளவான சாப்பாடு.

இரவு - 3 சப்பாத்தி, ஒரு டம்ளர் பால்.

தவிர, தினமும் காலை பயிற்சியின்போது ஒரு கப் ராகி கஞ்சி, முளைகட்டிய சிறுதானியங்கள் சிறிதளவு.

2 மணி நேர தடகள பயிற்சி, ஒரு மணி நேரம் தியானம் மற்றும் யோகா பயிற்சி, ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி, ஒன்றரை மணி நேரம் ஜிம் பயிற்சி என ஒவ்வொரு நாளும் ஒரு பயிற்சி.

8 ஆண்டுகளாக அசைவ உணவுகளை சாப்பிடுவதே இல்லை. தவிர, ஆயிலி ஃபுட் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் வகைகளும் சேர்த்துக்கொள்வதில்லை.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
நமக்குள்ளே!
முன்னேற்றம் அடைந்துவிட்டதா பெண் இனம்..?
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close