வெச்ச குறி தப்பவே தப்பாது!

``கையில் வில்லை எடுத்துவிட்டால் இலக்கு மட்டுமே கண்ணுக்குத் தெரியும். வேறெதிலும் கவனம் சிதறாது’’

- வளைந்த வில்லை கையில் வைத்துக்கொண்டு நேர்படப் பேசுகிறார் பிரியதர்ஷினி. சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள வள்ளுவர்-வாசுகி மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் வில்வித்தை வீராங்கனை இவர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரப்பிர தேசத்தில் உள்ள கான்பூர், பலிக்கா ஸ்டேடியத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 360-க்கு 225 புள்ளிகள் எடுத்து ரீகர்வ் பிரிவில் தங்கம் வென்றவர், வரும் ஆகஸ்ட்டில் நேபாளத்தில் நடைபெறவிருக்கும் சர்வதேச அளவிலான வில்வித்தை போட்டிக்கு தேர்வாகியுள்ளார் .

``என்னோட பயிற்சிக்களமே என் பள்ளிதான். முதலில் பள்ளிகள் அளவுல மட்டுமே ஜெயிச்சுட்டு இருந்த நான் இன்னிக்கு தேசிய அளவுக்கு வந்திருக்கேன்னா, அதுக்குக் காரணம் என்னோட பயிற்சியாளர் மதன்குமார் சார்தான்’’ என்கிறார் பிரியதர்ஷினி நெகிழ்ச்சியுடன். இந்த மதன்குமார் தேசிய அளவிலான வில்வித்தை வீரர் மற்றும் தமிழ்நாடு, யூத் ரூரல் கேம்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோஸியேஷனின் ஜெனரல் செகரட்ரியாக பணியாற்றுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்