குழந்தைகளுடன் சுற்றுலா... இதிலெல்லாம் கவனம் வையுங்கள்!

டூர் கைடு

குழந்தைகளுடன் சுற்றுலா செல்வதற்கு முன்பாக அந்த இடம் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க உகந்த இடம்தானா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்

சுற்றுலா செல்லும்போது குழந்தைகளுக்கு தங்க நகைகள் அணிவித்து அழைத்துச் செல்லா தீர்கள்.

சுற்றுலா  பயணம் செல்லும் இடத்தில் தங்குவதற் கான இடத்தின் பாதுகாப்பு பற்றி விரிவாக விசாரித்துக் கொள்ளுங்கள்.

பயணத்தின் போது பார்க்கும் பொருட்களை எல்லாம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்காதீர்கள். அது அவர்களுக்கு செரிமானப் பிரச்னையை ஏற்படுத்தி விடக்கூடும்.

குழந்தைகள் விளையாடுவதற் காக பந்துகள், செஸ், பரமபதம் போன்றவற்றை எடுத்துச் செல்லுங்கள்.

குழந்தைகளுக்கு உங்களின் மொபைல் எண்ணை மனப்பாடம் செய்யக் கற்றுக்கொடுங்கள். சிறிய குழந்தைகளாக இருந்தால் உங்களது முகவரி, செல் நம்பர் போன்றவற்றை பேப்பரில் எழுதி சட்டைப் பையில் வையுங்கள். அது அவசர நேரத்தில் பயன்படலாம்.

மலைப் பிரதேசமாக இருந் தால், குழந்தைகளுக்கு தேவையான ஸ்வெட்டர், மஃப்ளர், கிளவுஸ் உள்ளிட்ட குளிர் தாங்கும் உடைகளை எடுத்துச் சொல்ல தவறாதீர்கள்.

பயண நேரம், எத்தனை நாட்கள் தங்கப் போகிறீர்கள் என்பதை எல்லாம் தெளிவாக முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

காபி, வெந்நீர் போன் றவை பயணத்தின் போது தேவைப்படலாம். அதனால், ஃபிளாஸ்க் எடுத்துச் செல்ல மறக்க வேண்டாம்.

குழந்தைகளுக்குத் தேவையான முதலுதவி பொருட்கள், மருந்து, மாத்திரைகளை எடுத்து வைத்துக்கொள்ளுங் கள். உங்கள் குடும்ப டாக்டரின் செல் நம்பரை வாங்கிக்கொள்வதுடன், நீங்கள் குழந்தைகளுடன் டூர் செல்லும் விவரத்தையும் முன்கூட்டியே சொல்லி வையுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்