இரண்டாயிரம் ரூபாய் போதும்... மருத்துவம் படிக்கலாம்!

- இது எய்ம்ஸ் ஏணிகல்வி

‘‘ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் எடுத்தும், இரண்டு இலக்க லட்சங்களில் பயமுறுத்தும் கல்விக் கட்டணங்களால் மருத்துவப் படிப்பில் இருந்து பின்வாங்கும் மாணவக் குடும்பங்கள் பல. ஆனால், தெற்கு ஆசியாவிலேயே மருத்துவக் கல்வியிலும், மருத்துவ ஆராய்ச்சியிலும் முதன்மைத் தரம் வாய்ந்த மருத்துவக் கல்லூரிகளான எய்ம்ஸ் (AIIMS - All India Institute of Medical Sciences) கல்லூரிகளில், மிக மிகக் குறைந்த கட்டணத்தில் மருத்துவப் படிப்பு படிக்கலாம்!’’

- பரவலாக அறியப்படாத, பெற்றோர் மனதில் பால்வார்க்கும் தகவலைச் சொன்னார், டாக்டர் முத்துக்கனி. விருதுநகர் மாவட்டத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, சாதாரண பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்து, இன்று டெல்லி, எய்ம்ஸில் டி.எம்., நியூராலஜி படித்துக்கொண்டிருக்கிறார், முத்துக்கனி.

தமிழகத்தில் இருந்து அதிக மாணவர்கள் எய்ம்ஸில் கல்வி வாய்ப்பு பெற வேண்டும் என்ற அக்கறையில், முத்துக்கனி தந்த தகவல்கள் இங்கே...

எய்ம்ஸில் சேர தகுதி நிர்ணயம் என்ன? 

ப்ளஸ் டூ-வில் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம்  போன்ற பாடப்பிரிவுகளைப் படித்திருக்க வேண்டும். 17 வயது பூர்த்தியாகி இயிருக்க வேண்டும். ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற பொதுப்பிரிவு மற்றும் `ஒபிசி’ பிரிவைச் சேர்ந்த மாணவர்களும், 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். மாணவர் சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு நடத்தப்படும். 

நுழைவுத் தேர்வு எப்படி அமையும்?  

ஒவ்வொரு கல்வியாண்டும் மே மாதம் நடத்தப்படும் எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு மே 29-ம் தேதி நடக்கவிருக்கிறது. காலை 9 மணி முதல் 12.30 மணிவரை, மதியம் 3 மணி முதல் 6.30 மணிவரை என இரண்டு ஷிஃப்ட்டுகளாக ஆன்லைன் தேர்வு நடைபெறும். இரண்டு ஷிஃப்ட்டுகளில் நடைபெறுவதால் கேள்விகள் ஒரே தளத்தில் இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய நார்மலைசேஷன் முறை பின்பற்றப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்