நாட்டு வைத்தியம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
குழந்தைகளின் முடி வளர்ச்சிக்கு..!

குழந்தைப் பருவத்தின்போது வியர்வை அதிகம் சுரப்பதால் முடி வளர்ச்சி பாதிக்கப்படும். பச்சைப்பயறு, கடலைப்பருப்பு, பூலாங்கிழங்கு, ரோஜா இதழ், ஆவாரம்பூ போன்றவற்றால் ஆன பொடியைக்கொண்டு குழந்தைகளைக் குளிப்பாட்டி வந்தால் பிரச்னைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். பிறந்து 45 நாட்களுக்கு மேல் ஆன குழந்தைகளுக்கு தலையில் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் விடுவது, 60 நாட்களுக்கு மேல் ஆன குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் தடவி தலை வாருவது போன்றவற்றின்மூலம் செதில்கள் உருவாகாமல் தடுக்கப்படுவதோடு சீரான முடி வளர்ச்சி கிடைக்கச்செய்யும். அத்துடன் ரத்த ஓட்டம் சீராகி முடி செழித்து வளர உதவும். வளர்ந்துவிட்ட நிலையில் குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க பழக்குவது முடி நன்றாக வளர உதவும்.

குழந்தைகளுக்கு சிறு வயது முதல் கொத்தமல்லிக் கீரையை சாப்பிட கொடுத்து வந்தால்  முடி வளர உதவும்.இதேபோல், கொத்தமல்லிக்கீரையை சாப்பிடுவதால் எலும்பு, பற்கள் பலம்பெறும். துவையல், சட்னியாகவோ, சாதத்தில் கலந்தோ உண்ண கொடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கண் நோய்கள் வராமலும் காத்துக்கொள்ளும் இந்த கொத்தமல்லிக்கீரை.

சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற சருமப் பிரச்னைகளில் இருந்து குழந்தைகளை காத்துக்கொள்ள  குப்பைமேனி உதவும். குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் ஒரு துண்டு கறிமஞ்சள் சேர்த்து அரைத்து, வடை போல் தட்டவும், 200 மில்லி தேங்காய் எண்ணெயை வாணலியில் கொதிக்கவிட்டு, தட்டி வைத்ததைப் போட்டு வேகவிட்டு இறக்கி, ஆறவிட்டு, அந்த எண்ணெயை தடவி வந்தால் குணம் கிடைக்கும் (குப்பைமேனி, மஞ்சளின் சாரம் எண்ணெயில் இறங்கியிருக்கும்).

வசம்பை கல்லில் உரைத்து சிறிதளவு சாப்பிட கொடுத்தால், குழந்தைகளுக்கு  வயிற்று உப்புசத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இதேபோல் வசம்பை தீயிலிட்டு எரித்து அதன் சாம்பலை தொப்புள், அடிவயிறு போன்ற பகுதிகளில் தேய்த்து வந்தாலும் பலன் கிடைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்