பயணம் போகும் நேரம்... என்னவெல்லாம் அவசியம்?

டியர் டீன் ஏஜ் கேர்ள்ஸ்! உங்க ஹேண்ட் பேக்ல என்ன இருக்குன்னு யாராச்சும் கேட்டா உடனே அதை திறந்து காட்டும் தைரியம் எத்தனை பேருக்கு இருக்கு? பஸ் டிக்கட்ல ஆரம்பிச்சு ஏ.டி.எம்-ல எடுத்த ஸ்டேட்மென்ட் வரைக்கும் குப்பையை சேர்த்து வெச்சிருக்கீங்களா? 

இங்கே... ட்ராவல் டைம்ல என்னவெல்லாம் அவசியம் இருக்கணும்னு தெரிஞ்சிக்கலாம்.

செல்போன் சார்ஜர் ரொம்ப முக்கியம். நீண்ட தூர பயணமாக இருந்தால் `பவர்பேங்க்' எடுத்துச் செல்லலாம். இயர் போன்கள் இருந்தால் ரயில்/பேருந்து பயணங்களில் பாடல் கேட்க உதவும். இதைத் தவிர, சிறிய பென்டிரைவ், கார்டு ரீடர் போன்ற உங்களுக்கு தேவையான எலெக்ட்ரிக் அயிட்டம்களையும் வைத்துக்கொள்ளுங்கள்.

சேஃப்டி பின்கள் அவசரத்துக்கு வைத்திருப்பது நல்லது. அதேபோல் பெப்பர் ஸ்ப்ரே, சிறிய கட்டர்கள், லைட்டர், பேனா, மருந்துப் பொருட்கள் வைத்திருப் பதும் நல்லது.

போன் நம்பர், அட்ரஸ் கொண்ட சிறிய டைரியை உள்ளே வைத்துக் கொண்டால், ஹேண்ட் பேக் தொலைந்துப் போனால் திரும்பக் கிடைக்க உதவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்