குழந்தைகள் பாதுகாப்பு...

ப்ளீஸ், பீ சீரியஸ்!அவேர்னஸ்

`கலங்க வைக்கும் குழந்தைக் கடத்தல்... உஷார் ரிப்போர்ட்' என்ற தலைப்பில் சென்ற இதழில் வெளியான கட்டுரையில் குழந்தைகள் எப்படி, எதற்காக கடத்தப்படுகிறார்கள், கடத்தல் நெட்வொர்க், கடத்தல் டார்கெட் இடங்கள் போன்றவை இடம்பெற்றன. அதன் தொடச்சியாக இந்த இதழில் குழந்தைக் கடத்தலைத் தடுக்க அரசாங்க அமைப்பின் பரிந்துரை, குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியவை, குழந்தைக் கடத்தல் தொடர்பாக புகார் அளிப்பது, தத்தெடுப்புக்கான விதிமுறைகள் என பல்வேறு விஷயங்களை விரிவாக பார்ப்போம்...

குழந்தைகள் கடத்தலைத் தடுக்க என்ன வழி?

2000-வது ஆண்டு குழந்தைகள் காணாமல் போன வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், காணாமல்போன குழந்தைகள், கடத்தப்பட்ட குழந்தைகளாகத்தான் அடையாளம் காணப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி 2001-ம் ஆண்டு தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சி மன்றத்திலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவின் தலைவராக ஊராட்சிமன்ற தலைவரும், அந்தப் பகுதியின் காவலர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், சுயஉதவிக் குழுக்களை சார்ந்தவர்கள் குழுவின் உறுப்பினர்களாகவும் இருந்தனர். இக்குழு ஆண்டுக்கு மூன்று முறை கூடி விவாதித்து, மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கையை சமர்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கிராமப்புற பகுதியில் வசிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பிறந்ததில் இருந்து, ஒவ்வொரு வகுப்புக்கு செல்வது குறித்த அனைத்து தகவல்களையும் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். ஆனால், இந்தக் குழு அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே செயலற்று போனது சோகமே!

பெற்றோர்கள் செய்ய வேண்டியவை!

கடத்தப்படுவதில் இருந்து குழந்தையைக் காக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் சில...

சென்னயைச் சேர்ந்த வசதி படைத்த தம்பதி, அரசு அலுவலர்களாக இருந்துள்ளனர். கணவர் குடித்துவிட்டு, அடிக்கடி மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டே இருந்துள்ளார். பெற்றோர் சண்டையைத் தொடர்ந்து பார்த்து வந்த ஒரே மகனுக்கு, பெற்றோருடன் வசிக்கவே பிடிக்கவில்லை. இதனால் 150 ரூபாய் பணத்தோடு திடீரென வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்