இன்ஜினீயரிங் கவுன்சலிங்... இம்பார்ட்டன்ட் தகவல்கள்!

கல்வி

ங்கள் வீட்டுப் பிள்ளைகள் பொறியியல் படிப்பில் சேரவிருக்கிறார்களா? அதற்கான முதற்கட்ட நடைமுறையான கவுன்சலிங் பற்றிய குழப்பம், தயக்கத்தில் இருக்கிறீர்களா? இதோ... அது குறித்த சந்தேகங்களைத் தீர்க்கும் விதமான தகவல்கள் தருகிறார், கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.

விண்ணப்பம்

வரும் கல்வி ஆண்டுக்கான பொறியியல் கவுன்சிலிங்குக்கு, www.annauniv.edu என்ற ஆன்லைன் முகவரி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் (லிங்க்: https://www.annauniv.edu/tnea2016). விண்ணப்பிக்கத் தெரியாத சூழலில், அண்ணா பல்கலைக்கழகத்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்கப்பட்டுள்ள சேவை மையங்களைத் தொடர்பு கொள்ளலாம். ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கி, ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்து, சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 10 நாட்களுக்குள், ஏற்கெனவே சமர்ப்பித்த விண்ணப்பத்தில் மதிப்பெண்களைக் குறிப்பிட்டு, அந்த ஆன்லைன் விண்ணப் பத்தை டவுன்லோட் செய்து, விண்ணப்பத்துடன் கோரியுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து, விண்ணப்ப எண்ணுடன் கீழ்க்காணும் முகவரிக்கு தபால்  மூலமாகவும் அனுப்ப வேண்டும்.

செயலாளர்,
தமிழ்நாடு இன்ஜினீயரிங் அட்மிஷன்ஸ்,
அண்ணா பல்கலைக்கழகம்,
சென்னை - 600 025


விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்கள்

1. 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்று

2. 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்று அல்லது அதற்கு இணையான படிப்புக்கான சான்று

3. மாற்றுச்சான்றிதழ் (Transfer cerificate)

4. சாதிச்சான்றிதழ்

5. 12-ம் வகுப்பு தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு

6. நேட்டிவிட்டி சான்று

7. முதல் தலைமுறை எனில் அதற்கான சான்று

8. விளையாட்டுத் துறையில் இருந்தால் அதற்கான சான்று

9.
மாணவரின் பெற்றோர் முன்னாள் ராணுவ வீரர் எனில் அதற்கான சான்று

10.
மாற்றுத்திறனாளி எனில் அதற்கான சான்று

இவை அனைத்திலும் விண்ணப்ப எண்ணைக் குறிக்க மறக்க வேண்டாம். விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 500 வசூலிக்கப்படுகிறது (தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு ரூபாய் 250 மட்டும்). கட்டணத்தை செயலாளர், தமிழ்நாடு இன் ஜினீயரிங் அட்மிஷன்ஸ், சென்னை என்ற முகவரிக்கு டிமாண்ட் டிராஃப்ட் எடுத்து, அதனையும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு அனுப்பவும்.

மதிப்பெண் தகுதி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்