பாலியல் குற்றவாளிகளைத் திருத்தும் பாதிக்கப்பட்ட பெண்!

டானிக் ஸ்டோரி

‘நாரி ஷக்தி' (Nari Shakthi) விருது... பெண்ணின் வலிமையைப் போற்றி வழங்கப்படும் மத்திய அரசின் விருது. 2015-ம் ஆண்டுக்கான நாரி ஷக்தி விருதை, பல துறைகளில் சாதனை படைத்ததற்காக இந்திய ஜனாதிபதியிடமிருந்து பெற்றவர் வாசு ப்ரிம்லானி. பல துறைகளில் முத்திரை பதித்த வாசு ப்ரிம்லானி, பெண்களின் மல்டி டாஸ்க்கிங் திறனுக்கு ஒரு மிகச்சிறந்த நம்பிக்கை உதாரணம்; கொடுமையான தன் கடந்த கால வாழ்வில் இருந்து விடுபடுவதற்கான வழிகளைத் தேடிப் பறந்து, சிகரத்தில் அமர்ந்த பறவை.

டெல்லியில் பிறந்தவர் வாசு ப்ரிம்லானி. ஐந்து வயதான போது குடும்பத்துக்குப் பரிச்சயமான ஒரு நபரால் இரண்டு ஆண்டுகள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். வளர வளர அந்தக் கறுப்பு பக்கங்கள் மட்டும் மனதின் அடியில் தங்கி அவரை சித்ரவதை செய்துகொண்டே இருந்தன. இது போன்ற மன உறுத்தல்களுக்கு வடிகாலாக பலரும் கையை அறுத்துக்கொள்வதில் இருந்து மாடியில் இருந்து குதிப்பது வரை பல முடிவுகளை நாடுவார்கள். ஆனால், வாசு ப்ரிம்லானி சற்றே  மாற்றி யோசித்தார்.

இதைப்  பற்றி பேசும்போது மிகவும் நிதானமாகவே வார்த்தைகள் கோக்கிறார்... ``நான் சற்று மாறுபட்டு, உடற்பயிற்சியில் கவனம் செலுத்தினேன். அது விளையாட்டில் பல வெற்றிகள், சாகசங்கள் என்று என்னைச் செலுத்தியது. அதுக்குக் கிடைத்த பாராட்டுகள் என் காயங்களுக்கு மருந்தாக அமைந்தன. இருந்தாலும், அந்த கோர நினைவுகளில் இருந்து முழுவதுமாக மீள எனக்கு 30 ஆண்டுகள் ஆனது’’ என்று சொல்லும் வாசு ப்ரிம்லானி, தன் 21 வயதில் அமெரிக்கா சென்றுள்ளார். அங்குதான் அவர் சிறகுகள் விரித்துப் பறக்க ஆரம்பித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்