சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தோஷங்கள் போக்கும் ராமேஸ்வரம்!

ராவணன் பூஜை செய்ததால் ராவணேஸ்வரம் என்றும், ஸ்வேத மாதவர் பூஜித்ததால் ஸ்வேத மாதவபுரம் என்றும், 12 மாதமும் சூரியர்கள் பூஜித்ததால் பாஸ்கரபுரம் என்றும், ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க லிங்க பிரதிஷ்டை செய்து ராமனால் வணங்கப்பட்டதால் ராமேஸ்வரம் என்றும் பல பெயர்களில் அழைக்கப்படும் ராமேஸ்வரத்தில் அமைந்திருக்கும் திருக்கோயில், ஸ்ரீராமநாதசுவாமி ஆலயம்.

12-ம் நூற்றாண்டின் துவக்கம் வரை சிறிய கோயிலாக இருந்த இத்திருக்கோயில் இலங்கை மன்னன் நிஸங்கமல்லனால் திருப்பணிகள் செய்யப்பட்டு சீரமைக்கப்பட்டது. பின்னர் பாண்டியர்களுடன் போர் நடத்திய இலங்கை மன்னன் பராக்கிரமபாகு அந்தப் போரில் வெற்றி பெற்றதன் நினைவாகவும், போரின் வெற்றிக்கு ராமநாதசுவாமியின் கருணை காரணம் என நம்பியதாலும் கி.பி.1173-ம் ஆண்டில் கோயிலின் கர்ப்பகிரகத்தை கருங்கல்லினால் எழுப்பினான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்