பெர்ஃப்யூம்... தேர்ந்தெடுப்பது, பயன்படுத்துவது எப்படி?

பெண்களின் `பியூட்டி கிட்’டில் பெர்ஃப்யூமுக்கு முக்கிய இடம் உண்டு. அதைத் தேர்வு செய்யும்போதும், பயன்படுத்தும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி சொல்கிறார், சேலம் ‘சியாமிஸ் பியூட்டி பார்லர்’ பியூட்டிஷியன் ஷியாமளா தேவி.

பெர்ஃப்யூம் வாங்கும்போது பேக்கிங் பார்த்து மயங்கக்கூடாது. தரமான பிராண்ட் மற்றும் எக்ஸ்பயரி டேட் செக் செய்து வாங்கவும்.

பெர்ஃப்யூம் ஃப்ராக்ரன்ஸை ஸ்மெல் டெஸ்ட் செய்து வாங்கவும். முதல் முறையாக வாங்கும் பிராண்ட், ஃப்ராக்ரன்ஸ் எனில் மணிக்கட்டு பகுதியில் ஸ்பிரே செய்து 2 நிமிடங்களில் எரிச்சலோ, அலர்ஜியோ ஏற்படாதபட்சத்தில் வாங்கவும். அதாவது, PH அளவு 5-6 வரையில் இருப்பது நம் தோலை பாதிக்காது.

மைல்டான தன்மைகொண்ட பாடி ஸ்ப்ரேயை உடம்பில் நேரடியாகப் பயன்படுத்தலாம். PH அளவு அதிகமாக இருக்கும் பெர்ஃப்யூமை நேரடியாக உடலில் பயன்படுத்தக் கூடாது, அதில் உள்ள ஆசிட்டின் இயல்பு, சருமத்தை பாதிக்கும். எனவே, ஆடை அணிந்த பின்னரே பயன்படுத்த வேண்டும். கூடவே...  சரிகை, சம்கி வேலைப்பாடுகளை அது கறுத்துப்போகச் செய்யும் என்பதையும் கவனிக்கவும்.

பொதுவாக, எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்களுக்கு இயற்கையாகவே பெர்ஃப்யூம் செயல்பாடு நீண்ட நேரம் தாங்கும். வறண்ட சருமம் உள்ளவர்கள் மாய்ஸ்ச்சரைசர் தடவிய பின் உபயோகிக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்