கம்பெனிகள் உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன?

வேலைவாய்ப்பு ஸ்பெஷல்

`படிப்பு முடிஞ்சுது... இனி, வேலை தேடி அலைய வேண்டியதுதான்' என்று கிளம்பிவிட்டீர்களா... ஒரு நிமிஷம்! நமக்கு வேலை தருவதற்காக ஒவ்வொரு நிறுவனமும் நம்மிடம் இருந்து எதையெல்லாம் எதிர்பார்க்கும் என்பதை முதலில் தெரிந்து வைத்துக்கொண்டால், சுலபமாக வேலையைக் கைப்பற்றலாம்தானே!

* இதோ, உங்களுக்காகவே சென்னையைச் சேர்ந்த `காம்ஃபை சொல்யூஷன்' நிறுவனத்தின் ஹெச்.ஆர் கன்சல்டன்ட் ஏ.கே சுகுமாரன் அற்புதமான வழிகாட்டல்களைத் தருகிறார்...

நீங்கள் எந்த மொழியில் புலமை பெற்று இருக்கிறீர்கள் என்பதைத் தாண்டி, உங்கள் கருத்தை எந்த அளவில் தெளிவாக பிறரிடம் பகிர்கிறீர்கள் என்பது முக்கியம். அதேசமயம், எந்தத் துறையை தேர்வு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து மொழியும் முக்கியம். உங்கள் தாய்மொழி தவிர்த்து ஆங்கிலம், இந்தி போன்று ஏதேனும் ஒரு மொழியைக் கூடுதலாக தெரிந்து வைத்துக்கொண்டால், கால்சென்டர் போன்ற பணிகளுக்குச் செல்வதற்கு உதவியாக இருக்கும்.

எந்தத் துறையில் வேலை தேடுகிறீர்களோ அந்தத் துறையில் உள்ள செய்முறை சார்ந்த நுணுக்கங்களைத் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. மேலும் உங்கள் துறையுடன் தொடர்புடைய கோர்ஸ்களையும் படிக்கலாம்.

ஒவ்வொரு துறையிலும் இன்று அதிவேகமான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. அந்த மாறுதல்களுக்கு அப்டேட் செய்துகொள்ளும் நபராக இருக்க வேண்டும் என்று நிறுவனங்கள் நிச்சயம் எதிர்பார்க்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்