அரசுப் பணி தேர்வுகள்... அசத்தலாம்... திட்டமிட்டால்!

வேலைவாய்ப்பு ஸ்பெஷல்

ல்லூரியில் படித்துக்கொண் டிருக்கும்போதே அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதன் முக்கியத்துவத்தையும், அதற்கான அறிவுரைகளையும் வழங்குகிறார்... சென்னை ‘இந்தியன் ஐ.ஏ.எஸ் அகாடமி’யின் இயக்குநர், சுஜாதா ரமேஷ்.

‘‘ப்ளஸ் டூ முடித்ததுமே, அரசுத்துறை, பொதுத்துறை, தனியார் துறை என்று எந்தத் துறைப் பணியில் விருப்பம் என்று முடிவு செய்து, அதற்கேற்ப கல்லூரிப் படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நோக்கம் உள்ள மாணவர்கள், மத்திய அரசுப் பணியா, மாநில அரசுப் பணியா என்பதை முடிவு செய்துவிட்டு, தாங்கள் தேர்ந்தெடுத்த போட்டித் தேர்வில் வெற்றி பெற்று தங்கள் பகுதியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்து ஆலோசனைகள் பெறலாம். உடனடியாக, அந்தந்தப் போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டத்தை (Syllabus) இணையத்தின் வாயிலாகத் தெரிந்துகொண்டு, அதற்கான பாடப் புத்தகங்களை வாங்கி, படிக்க ஆரம்பிக்கலாம்.

பட்டம் பெறும் முன்னரே பயிற்சி!

கல்லூரிப் படிப்பை முடித்த பின் வேலை கிடைக்க வில்லை, கிடைத்த வேலை பிடிக்கவில்லை என்பது போன்ற காரணங்களால் அடுத்த சாய்ஸாக போட்டித் தேர்வுக்குத் தயாராகும்போது... வேலையின்மை, அது குறித்த சுற்றத்தின் விமர்சனம் போன்றவற்றைச் சுமந்தே தேர்வை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அது படிப்பின் மீதான கவனத்தை தொந்தரவு செய்யும். ஆனால், கல்லூரியில் முதல் ஆண்டு அல்லது இரண்டாம் ஆண்டில் இருந்தே பயிற்சி எடுத்தால், கல்லூரி முடிப்பதற்குள் போட்டித் தேர்வுக்கான சிலபஸ் அனைத்தையும் கவர் செய்துவிடலாம்; விரைவாகவும் நம்பிக்கையுடனும் தேர்வை எதிர்கொள்ளலாம்.

கோச்சிங் சென்டர் கட்டாயமில்லை!

போட்டித் தேர்வுகளுக்கு கோச்சிங் சென்டர் சென்று படிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. தேவையும் விருப்பமும் இருந்தால் அங்கு சேரலாம். வீட்டில் இருந்தபடியே தயார் செய்யலாம். போட்டித் தேர்வுக்குத் தயாராகும்போது, எல்லா பரீட்சைகளையும் போட்டுக் குழப்பிக்கொண்டு... தேவைக்கும் அதிகமான பாடங்களைப் படித்து நேரத்தை விரயமாக்கினால், வாய்ப்பும் தள்ளிக்கொண்டே போகும். எனவே, எந்தத் தேர்வு எழுதவிருக்கிறீர்களோ அதற்கான பாடங்களை மட்டும் படித்தால் போதும். முக்கியமான விஷயம், முந்தைய தேர்வுகளின் கேள்வித்தாள்களில் இருந்து அதிக அளவிலான கேள்விகள் கேட்கப்படுவதால், அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.

ஆன்லைன் பொழுதுபோக்குகள்... அவாய்ட்!பொதுவாக, மாணவர்களுக்கு கல்லூரி சென்று வரும் நேரம் போக, ஒவ்வொரு நாளும் 10-12 மணிநேரம் மீதம் இருக்கும். இதில் தூங்கு வதற்கு என 6-7 மணி நேரத்தையும், ஓய்வுக்காக இரண்டு மணி நேரத்தைக் கழித்தாலும், 3-4 மணி நேரம் இருக்கும். மேலும், விடுமுறை நாட்களில் கூடுதலான நேரம் கிடைக்கும். எனவே, கிடைக்கும் நேரத்தை போட்டித் தேர்வுகளுக்கு செலவழித்தாலே எளிதாக வெற்றி பெறலாம். ஆனால் நடப்பது என்ன..? இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் சமூக வலைதளங் களிலேயே தங்கள் நேரத்தை வீணாக்குகிறார்கள். இரவு நேரத்தில் வாட்ஸ்அப், டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் நுழைந்து இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாகச் செலவழிக்கின்றனர். அதையெல்லாம் தவிர்த்து சரியாகத் திட்டமிட்டு ஒவ்வொரு நாளும் படித்து வந்தால், ஒரே வருடத்தில் மொத்த சிலபஸையும் கவர் செய்துவிடலாம். மேலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் படித்த பாடங்களை ரிவைஸ் செய்தால், அனைத்துப் பாடங்களும் மனதில் பதிந்துவிடும். குறைந்தபட்சம் இரண்டாண்டு களுக்கு ஆன்லைன் பொழுதுபோக்குகளைத் தவிர்த்தால், அரசு வேலைக்கு மிக அருகில் சென்றுவிடலாம்.

மனப்பாடம் வேண்டாம்!

மனப்பாடம் செய்தால், மறந்து போகும். எனவே, ஒவ்வொரு பாடத்தையும் புரிந்தும், ஆழ்ந்தும் படிக்க வேண்டும். நேற்று நடந்தது இன்றைக்கு வரலாறு; இன்று நடப்பது, நாளைய

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்