மருத்துவம்

பெண்களுக்கு கைகொடுக்கும் பதநீர்!

கோடை வெப்பத்தை தணிக்க இயற்கை தரும் வரப்பிரசாதங்களுள் ஒன்று பதநீர். இது பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் வல்லமை படைத்தது. உடல் மெலிந்து காணப்படும் குழந்தைகளுக்கு பதநீர் குடிக்க கொடுத்தால், அதில் உள்ள குளுக்கோஸ் உடல் வளர்ச்சியை சீராக்கி புஷ்டியைத் தரும். மேலும் ஆறாத புண், கொப்புளம் போன்றவற்றுக்கு பதநீரை கஞ்சியுடன் கலந்து தடவி வந்தால் குணம் கிடைக்கும். பதநீர் உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு உடல்வீக்கம். வயிற்று உபாதை போன்றவற்றை கட்டுப்படுத்தும். 

பெண்களுக்கு வரக்கூடிய வெள்ளைப்படுதல் போன்ற தொந்தரவுகளைக் குணப்படுத்துவதோடு சிறுநீர் பெருக்கியாக செயல்படும், பதநீர்! கருவுற்ற பெண்களும், மகப்பேறு அடைந்த பெண்களும் பதநீர் குடிப்பதால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய மலச்சிக்கல், வயிற்றுப்புண் போன்றவை குணமாகும்.

இந்த சீஸனில் பரவலாகக் கிடைக்கக்கூடிய பனை நுங்கை சாப்பிட்டால்... அது உடம்புக்கு குளிர்ச்சியை உண்டாக்கி விக்கலையும், குமட்டலையும் குணப்படுத்தும். வியர்க்குரு, அரிப்பு போன்ற தோல் நோய்களையும் சரிசெய்யும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்