`வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்’ - ஆசையைத் தூண்டும் மோசடி கம்பெனிகள்

வேலைவாய்ப்பு ஸ்பெஷல்

ஒரு பொருளுக்கு சந்தையில் மவுசு கூடினால்... அதில் போலிகளும் கலப்படங்களும் பெருகிவிடும். நீக்கமற நிறைந்திருக்கும் இந்த ‘ஏமாற்று தந்திரம்’ வேலைவாய்ப்பு துறையையும் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக, ‘கம்ப்யூட்டர் தெரியுமா... வீட்டிலிருந்தபடியே லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்’ என்று வரும் கவர்ச்சிகர விளம்பரங்கள் அந்த ரகம்தான்.

‘வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும்’ என்ற ஆசை உள்ள பெண்கள் பலருக்கும் அந்த வாய்ப்பு அமைவதில்லை. கணவன், குழந்தை என வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்க வேண்டிய சூழ்நிலையில்… ‘வீட்டிலிருந்தே வேலை’ எனும் விஷயம் அவர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகமாக்குகிறது. இங்குதான் தொடங்குகிறது, ஏமாற்றுக்காரர்களின் சதி வேலை. இப்படி ஆசைப்பட்டு பணத்தை இழந்தவர்கள்... ஏராளம்!

இந்த மோசடி குறித்து சில முன்னெச்சரிக்கை விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார், ‘சைபர் சொசைட்டி ஆஃப் இந்தியா’ நிறுவனத்தின் முன்னாள் செயலாளர் மற்றும் ஐ.டி.எம்.ஆர்’-ன் (ITMR - Institute of Technology Management & Research) முதன்மை செயலாளர் டாக்டர் முத்துக்குமரன். இவர், ஆன்லைன் மோசடி வழக்குகள் பலவற்றிலும் காவல்துறைக்கு உதவி வருகிறார்.

“தற்போது ஆன் லைனில் ரெஸ்யூம் அப்லோட் செய்து வேலைக்காக விண்ணப் பிப்பது பெருகி வருகிறது.

அப்படி அப்லோட் செய்யும் நபர்களைத் தான் ஏமாற்று பேர் வழிகள் முதலில் குறிவைக் கிறார்கள். வேலைக்காக காத்திருப்பவர்களிடம்… சர்வே வேலை, ஃபார்ம் ஃபில்லிங் வேலை, டேடா என்ட்ரி வேலை என பல வேலைகள் அளிப்பதாகச் சொல்லி செல்போனிலேயே பணம் பறிக்கப் பார்ப் பார்கள். இப்படி செல் போனில் மட்டுமே பேசுபவர்களிடம் கண் டிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களை நம்பி பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யக் கூடாது. உண்மையில் எந்த ஒரு நேர்மையான நிறுவனமும் வேலைக் காக ஊழியர்களிடம் பணம் கேட்பது இல்லை.

பெரும்பாலும் ‘மெடிக்கல் ட்ரான்ஸ் கிரிப்ஷன்’ வேலையைச் சொல்லித்தான் அதிக ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. இந்த வேலையைப் பெற்றுத்தருகிறோம் என்று சொல்லி ஆயிரக்கணக்கான ரூபாயை கமிஷனாகப் பெற்றுக்கொண்டு கம்பி நீட்டும் மோசடிப் பேர்வழிகள் ஏராளம். மெடிக்கல் ட்ரான்ஸ்கிரிப்ஷன் நுணுக்கமான வேலை. அதற்குத் தனிப் பயிற்சி தேவை. நம்மிடம் எந்தத் தகுதியையும் எதிர்பார்க்காமல் வேலை கொடுக்கிறேன் என்று சொன்னால், அது நிச்சயம் ஏமாற்று வேலையாகத்தான் இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்