வாசகிகள் கைமணம்!

சுட்டிகளைக் கவரும் ஸ்வீட் கிரன்ச்!ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200

ஸ்வீட் கிரன்ச்

தேவையானவை: ஏதாவது பிஸ்கட் - 100 கிராம், கண்டன்ஸ்டு மில்க் - அரை டின், வறுத்த முந்திரி - 15, தேங்காய் - அரை மூடி (துருவிக்கொள்ளவும்).

செய்முறை: பிஸ்கட்டை நன்றாகப் பொடிக்கவும். இதனுடன் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கலந்து நன்கு குழைத்து, வறுத்த முந்திரி, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்து, விருப்பமான அளவில் உருட்டி ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைப்படும்போது எடுத்துப் பரிமாறலாம்.

எளிதாக செய்யக்கூடிய இந்த `ஸ்வீட் கிரன்ச்’சை, குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்