ஒரு டஜன் யோசனைகள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வேலைவாய்ப்பு பதிவு... விரிவான தகவல்கள்!

ந்த இதழ் `ஒரு டஜன் யோசனைகள்’ பகுதியில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவுசெய்வது, புதுப்பித்தல், உதவித் தொகை உட்பட பல்வேறு பயனுள்ள தகவல்கள் இடம்பெறுகின்றன.

1. முதல் பதிவு

பதினான்கு வயது நிரம்பிய வர்களே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது முதல் கல்வித்தகுதியை பதிவு செய்ய முடியும். படிப்பை பாதியில் நிறுத்தியவர் என்றாலும் பதினான்கு வயதில்தான் பதிவு செய்ய இயலும். இப்போது நீங்கள் படித்த பள்ளியிலேயேகூட
10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புக் கான பதிவுகள் இலவசமாக செய்துதரப்படுகின்றன.

2. இணைக்க வேண்டியவை

முதன்முதலில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்ய குடும்ப அட்டையின் நகல், சாதிச்சான்று மற்றும் உங்களின் தகுதிக்கான அனைத்து கல்விச்சான்றுகளையும் எடுத்துச்செல்ல வேண்டும். ஆதரவற்றோர் இல்லங்களில் வளர்ந்தவர்கள், அந்தச் சேவை மையத்தின் முகவரியை குடும்ப அட்டைக்குப் பதிலாக கொடுக்கலாம். மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் தங்கள் அடையாள அட்டையைக் கொடுத்தால் போதும்.

3. கட்டணம்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்ற எத்தகைய செயல்பாடுகளுக்கும் எவ்வித கட்டணமும் வசூ லிக்கப்படுவது இல்லை. அனைத்துச் சேவைகளும் இலவசமாக செய்து தரப்படுகின்றன.

4. புதுப்பித்தல்


பதிவுசெய்த பிறகு 3 ஆண்டுக்கு ஒருமுறை தகவலை புதுப்பிக்க வேண்டும். அப்படி புதுப்பிக்கவில்லை எனில், உங்களுக்கு சலுகை காலமாக 18 மாதங்கள் தரப்படும். அதற்குள் புதுப்பித்துக்கொண்டால், எத்தகைய பின்னடைவும் ஏற்படாது. 18 மாதங்களுக்குப் பிறகும் புதுப்பிக்கவில்லை என்றால் உங்கள் பதிவு ரத்து செய்யப்படும். இதனால் நீங்கள் சீனியாரிட்டியை இழப்பீர்கள்.

5. தொலைந்து போனால்...


எம்ப்ளாய்மென்ட் கார்டு தொலைந்துபோனால் நீங்கள் எந்த அலுவலகத்தில் பதிவுசெய்தீர்களோ, அந்த அலுவலகத்துக்குச் சென்று உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களுடன் விண்ணப் பித்தால் புதிய அட்டையை அதே சீனியாரிட்டியில் பெற்றுக்கொள்ளலாம்.

6. உதவித்தொகை

படித்து முடித்து வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப் புத்துறை மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால், அதை பெறுவதற்கு நீங்கள் தனியார் நிறுவனத்தில்கூட பணியில் இருக்கக்கூடாது. மேலும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிந்திருக்க
வேண்டும். வேலை வாய்ப்பற்றவர் களுக்கான உதவித் தொகை படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இந்த உதவித் தொகை 3 மாதத்துக்கு ஒருமுறை என 3 வருடங்களுக்கு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் எனில் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். பத்தாம் வகுப்புகூட முடிக்காத வர்களுக்கு 150 ரூபாயும், 10 முதல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 200 ரூபாயும், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு 300 ரூபாயும் வழங்கப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்