சளியை அகற்றும் கண்டங்கத்திரி!

வைத்தியம்எம்.மரிய பெல்சின்

ண்டங்கத்திரி... இது கத்திரிக்காய் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறு செடியாகும். இதன் பூ கத்திரிச்செடியின் பூவைப்போலவே சிறிது சிவந்து இளம் ஊதா நிறத்தில் காணப்படும். இதற்கு பிரகதி, கண்டகாரி என்ற வேறு பெயர்களும் உண்டு. முட்கள் நிறைந்த இந்த கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இதை உடம்பில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசிவந்தால் நாற்றம் விலகும். கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து பக்குவமாகக் காய்ச்சி வடித்து தலைவலி, கீல்வாதத்துக்கு பூசி வந்தால் விரைவில் குணமாகும். கண்டங்கத்திரி காயை சமைத்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளியேற்றுவதோடு பசியைத் தூண்டும். மேலும், சமையலில் பயன்படுத்தும்போது காயைத் தட்டி அதன் விதையை அகற்றிவிட்டு குழம்பு செய்வார்கள். இப்படி குழம்பு செய்து சாப்பிட்டால் உடல் அழுக்குகள் நீங்குவதோடு இருமல் நீங்கும்.

வெண்புள்ளி பிரச்னைக்கு இதன் பழம் நல்ல ஒரு மருந்தாகும். அதாவது, கண்டங்கத்திரிப் பழங்களைப் பறித்து சட்டியில் போட்டு நீர்விட்டு வேக வைத்து கடைந்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். இதில் நான்கு பங்கு எடுத்துக்கொண்டு அத்துடன் ஒரு பங்கு நீரடி முத்து
எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி பக்குவமாக வடிகட்டி வெண்புள்ளி உள்ள இடங்களில் பூசி வந்தால் மறையும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுத்தால் பலன் கிடைக்கும். பல்லில் உள்ள கிருமிகளைப் போக்கவும் கண்டங்கத்திரி பழத்தின் விதைகள் பயன்படும். தீயில் கண்டங்கத்திரி விதைகளைப் போட்டால் வரக்கூடிய புகையை பற்களின் மேல்படும்படி செய்தால் வலி தீரும். இதன் பழத்தையும் உலர்த்தி பொடித்து நெருப்பில் போட, புகை வரும். இதனாலும் பல்வலி, பல்லிலுள்ள கிருமிகள் நீங்கும். அதிக உஷ்ணமாகி சிறுநீர் இறங்காமல் வலி ஏற்படும்போது கண்டங்கத்திரி இலைச்சாற்றுடன் சமஅளவு தேன் கலந்து ஒருவேளை சாப்பிட்டாலும் குணம் கிடைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்