பீச் இல்லாத ஊரில் பீச் கபடி சாம்பியன்!

சாம்பியன்வெ.வித்யா காயத்ரி - படங்கள்: க.விக்னேஷ்வரன்

குக்கிராமத்தில் பிறந்து வியட்நாமில் நடந்த ஆசிய அளவிலான பீச் கபடி போட்டியில் இந்தியாவுக்குத் தங்கம் வாங்கித் தந்திருக்கிறார், நம் தமிழ்ப்பெண் அந்தோணியம்மாள்.

‘’என்னோட சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் சோழபாண்டிபுரம் என்கிற குக்கிராமம். அப்பா பால் வியாபாரி, அம்மா கூலி வேலை பாக்குறாங்க. சின்ன வயசுல விளையாட்டா விளையாடின கபடில ஆர்வம் வர, அதுல என் முழு திறமையைக்காட்ட ஆரம்பிச்சேன். ஆறாம் வகுப்பில் இருந்து கபடி விளையாடுறேன். ஒருமுறை மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் கலந்துகொண்டு ஆடின என்னோட திறமையைப் பார்த்த மதுரை யாதவா கல்லூரி பயிற்சியாளர் ஜனார்த்தனன் சார், ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல என்னை அங்க சேர்க்க உதவினார். அப்படியே எனக்கு பீச் கபடி எப்படி விளையாடணும்னு ட்ரெய்னிங்கும் கொடுத்தார்'' என்கிறவரின் மெடல் லிஸ்ட் அவருடைய பெயரைப் போலவே கியூட் நீளம்.

``பீச் கபடில அப்படியென்ன வித்தியாசம்னு என்னை பார்க்கிறவங்க எல்லாம் கேப்பாங்க. கபடியைவிட பீச் கபடி கஷ்டமானது. மணல்ல விளையாட அதிக ஆற்றலும், திறமையும் வேணும். பீச் கபடியில் ஆட்டம் இழந்தாலும் புள்ளிகள் மட்டுமே குறையும், ஆட்டம் இழந்தவங்க வெளியேறத் தேவையில்லை. 30 நிமிஷம் தொடர்ந்து ஆடணும்" என்றவர் தன் பயிற்சி முறைகள் பற்றிச் சொன்னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்