‘பெண்களுக்கு தீங்கிழைத்தால் தட்டிக் கேள்!'

- தன் மகன்களுக்கு மேரி கோமின் கடிதம்!அனுபவம்எம்.குமரேசன், மு.பிரதீப் கிருஷ்ணா

‘லெட்ஸ் டாக் அபவுட் ரேப்’ என்ற தலைப்பில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று, பிரபலங்கள் மூலம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதில் மேரி கோம், தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளைச் சொல்லி, தன் மகன்களுக்கு பெண்களை மதிக்க கற்றுத் தர கடிதம் எழுதியிருக்கிறார். அதன் தமிழாக்கம் இதோ...

‘உலகப் புகழ்பெற்ற உங்கள் தாயும் பாலியல் இன்னல்களுக்கு ஆளானவர்தான். ஆம்... என்னுடைய 17 வயதிலும், அதன்பிறகு டெல்லி, ஹிசார் போன்ற இடங்களிலும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானேன்' என்றவர் ஆண்களின் மனநிலை குறித்து கீழ்க்கண்டவாறு கேள்வியெழுப்பியிருக்கிறார்.

`அன்பு மகன்களே... உங்களைப் போல்தான் எனக்கும் இரு கண்கள். ஒரு மூக்கு உள்ளது. நமது உடலில் உள்ள சில உறுப்புகள்தான் என்னையும் உங்களையும் வேறுபடுத்துகின்றன. உங்களைப் போல்தான் நானும் மூளையால் சிந்திக்கிறேன். மனதால் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறேன். எனது மார்பகங்கள் அடுத்தவர்கள் தொடுவதற்காக படைக்கப்படவில்லை. இத்தகைய அவமானத்தை மூன்று முறை பொது வெளியில் சந்தித்திருக்கிறேன். கண்கள் நனைய அழுதிருக்கிறேன். என்னுடைய தோழிகளும் இத்தகைய அனுபவத்தால் வெதும்பியிருக்கின்றனர். ஆண்கள் பாதுகாப்பு நிறைந்தவர்கள் என்றால் நாங்கள் ஏன் சுதந்திரமாக நடமாட முடியவில்லை?’

டெல்லியில் காதலிக்க மறுத்த பெண் முப்பது முறைக்கு மேல் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ள மேரி கோம், `உங்கள் கண் எதிரே பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தாலோ அல்லது பெண்களுக்கு யாராவது தீங்கிழைத் தாலோ ஒரு வீரனாக கண்ணியமிக்க ஆணுக்குரிய கம்பீரத்தோடு தட்டிக் கேட்க வேண்டும். அடுத்த உயிர்கள் மீது அக்கறையில்லாத சமூகத்தில் வாழ்வதுதான் நமது மிகப் பெரிய பலவீனம். அந்த பலவீனத்தை களைந்தெறிய நீ வளர்ந்து நிற்கும் சமூகம் உதவும்’ என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்