இது வாழ்க்கை தந்த வரம்! - டான்ஸ் மாஸ்டர் லலிதா ஷோபி

சக்சஸ் ஸ்டோரிநா.சிபிச்சக்கரவர்த்தி - படங்கள்: மீ.நிவேதன்

லிதா ஷோபி... கமல் தொடங்கி ஜோதிகா வரை அத்தனை பேரையும் தன் நடனத்திறமையால் ஆட்டி வைக்கும் மோஸ்ட் வான்ட்டட் கொரியோகிராஃபர். ஆனால், அவருடைய பால்ய வயது வறுமையின் கோரப்பிடியில் ஊசலாடியது என்றால், நம்பச் சிரமமாகவே இருக்கும். அதையும் மீறி திறமையால் முன்னுக்கு வந்த அவருடைய வாழ்க்கை பல வெற்றிக்கதைகளால் ஆனது.  தன் ஒரு வயது மகள் ‘சமந்தகமணி அஷ்வீகா’வை கொஞ்சியபடியே பேச ஆரம்பிக்கிறார் லலிதா ஷோபி...

“நான்,  அப்பா, அம்மா, தம்பினு க்யூட் ஃபேமிலி. படிப்பு தவிர ஏதாவது ஒரு துறையிலேயும் நான் ஜொலிக்கணும்னு நினைச்ச அப்பா, என்னை டான்ஸ் கிளாஸ்ல சேர்த்து விட்டாங்க.  எப்போவும் குதிச்சுக்கிட்டே விளையாட்டா டான்ஸ் கத்துக்கிட்டேன். ரொம்ப சந்தோஷமா போயிட்டு இருந்த லைஃபை உடைச்செறிஞ்சது அப்பாவோட மரணம். அப்போ எனக்கு 10 வயசு. அதுவரை அப்பாவே உலகம்னு இருந்த நாங்க ஆடிப்போனோம். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழி தெரியாம தவிச்சோம். `அடுத்து என்ன பண்ணப் போற? சாப்பாட்டுக்கு என்ன வழிப் பண்ணப் போற?' குழந்தைகளை எப்படி காப்பாத்தப் போற? - இப்படி அம்மாவைக் கேள்விகளே துரத்துச்சு. அதுவரை வீட்டைவிட்டு வெளியில வராத அம்மா சின்னச் சின்ன வேலைக்கு எல்லாம் போனாங்க. மூச்சுவிட முடியாத இருட்டு அறையில வாழ்க்கை எங்களை அடைச்சது. எங்க ஒட்டு மொத்த சந்தோஷத்தோட என் படிப்பும் நின்னு போனது'' என்கிற லலிதாவின் நிலையறிந்த சாந்திகுமார் மாஸ்டர், இவரை சினிமாவுக்கு டான்ஸ் ஆட அழைத்து வந்திருக்கிறார்.

``மாஸ்டர் `காதலுக்கு மரியாதை' படத்துக்கு கொரியோகிராஃப் பண்ணினவங்க. டான்ஸ் பத்தி ஜீரோ பர்சன்ட் நாலட்ஜோட படிப்பைத் தொலைச்சுட்டு தினசரி வாழ்க்கையை நகர்த்துறதுக்காக டான்ஸர் ஆனேன். அம்மாவுக்கும் எனக்கும் ஷூட்டிங்ல சாப்பாடு கொடுப்பாங்கன்னு கூட தெரியாத வெள்ளந்தியா இருந்தோம். டிபன்பாக்ஸோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போவேன். மெதுமெதுவா சைல்டு டான்ஸரானேன். என் சம்பாத்தியம் எங்களுக்கு தெனமும் ரெண்டு வேளை சாப்பாடு முழுசா கிடைக்கிற அளவுக்கு உயர்த்துச்சு.

வளர்ந்ததும் சீனியர்ஸோட டான்ஸ் ஆட ஆரம்பிச்சேன். எப்பவும் சீனியர்ஸ் முதல்லேயும், ஜூனியர்ஸ் கடைசியிலேயும் டான்ஸ் ஆடுவாங்க. ஒருதடவை ஷூட்டிங் ஸ்பாட்ல ஒரு அக்கா மைக் வெச்சு எல்லாரையும் ஒழுங்குபடுத்திட்டு இருந்தாங்க. அவங்ககிட்ட போய் `உங்களை மாதிரி நானும் இத்தனை பேருக்கு டான்ஸ் சொல்லிக்கொடுக்கணும்னா என்ன செய்யணும்'னு கேட்டேன். ‘நல்லா டான்ஸ் ஆடணும்’னு சொன்னாங்க. அதையே ஒரு வேத மந்திரமா மனசுல வெச்சுகிட்டேன். குரூப்ல கடைசியா ஆடினாலும், ‘என்னை யாரு பார்க்கப்போறா’ங்கிற எண்ணம் ஒருநாளும் எனக்கு வந்ததில்லை. அந்த அளவுக்குக் கொடுத்த வேலையை சின்சியரா பண்ணினேன். வீட்டுலேயும் வெறித்தனமா பிராக்டீஸ் பண்ணுவேன். என் விடாமுயற்சியால தொடர்ந்து முதல் வரிசையில ஆட வாய்ப்பு கிடைச்சது'' என்கிறவரின் நடனப் பயணம் பல பிரபலமான கொரியோகிராஃபர் களால் நிறைந்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்