மனநிறைவுக்கு ஸ்டிச்சஸ்; வாழ்க்கைக்கு வெண்பா!

நீயா நானா கோபிநாத்தின் மனைவி துர்காசெலிப்ரிட்டி மனைவிஆர்.வைதேகி, படங்கள்: பா.காளிமுத்து

‘தி ஸ்டிச்சஸ்' என்கிற பெயரில் பொட்டிக் நடத்திவருகிற துர்கா, ‘நீயா நானா' கோபிநாத்தின் மனைவி. எளிமையாகவும் அழகாகவும் இருக்கிறது அவருடைய பொட்டிக்.

‘`என்னோட பூர்வீகம், திருச்சி பக்கம் துறையூர். அப்பா டிஃபன்ஸ்ல இருந்தவர். நான் ஒரே பொண்ணு. அப்பாவோட வேலை காரணமா ஊர் ஊரா சுத்தியிருக்கோம். அதனால நிறைய மொழிகள் தெரியும். படிச்சது பி.பி.ஏ, பார்த்தது `பேங்க் ரீஜினல் ஹெட்' வேலை. திருமணத்துக்குப் பிறகு ஃபுல் டைம் ஹோம் மேக்கர்” என்று தன்னைப்பற்றி ஷார்ட், பாஸ்ட் இன்ட்ரோ கொடுக்கிறார் துர்கா.

‘‘எல்லாரையும் போல எங்க வீட்டுலயும் இவரைப் பத்தி விசாரிக்கப் போனாங்க. `ஊர் அறிஞ்ச ஒருத்தரைப் போய் விசாரிச்சிருக்கீங்களே'னு இப்பவும் அடிக்கடி கிண்டல் பண்ணுவார். கன்சீவானதும் என் வேலையை விட்டுட்டு கூட்டுக் குடும்பத்தை கவனிச்சுட்டு இருந்தேன். அப்பா இறப்புக்குப் பிறகு தனிமையான அம்மாவை `எங்களோடேயே தங்கிடுங்க'னு  சொன்ன மாமனார் - மாமியார் வார்த்தையை அழகா ஏத்துக்கிட்டு இப்ப அம்மாவும் என் கூடவே இருக்காங்க. எந்த பொண்ணுக்கும் இப்படி ஒரு அருமையான குடும்பம் அமையாது” என்று நெகிழ்கிற துர்கா பிஸினஸ் உமனானது தனிக்கதை!

‘‘என் பொண்ணு வெண்பா பிறந்ததும் எல்லா அம்மாவையும்போல அவளுக்கு அழகழகா யுனிக் டிரெஸ்ஸா போட்டு பார்க்க ஆசைப்பட்டேன். நானே டிசைன் பண்ணி டெய்லர் கிட்ட கொடுத்து தைச்சு வாங்குவேன். அதைப் பார்த்த எல்லாரும், `நீங்களே பொட்டிக் ஆரம்பிங்களேன்'னு ஐடியா கொடுத்தாங்க. பொட்டிக்ங்கிற பேர்ல காஸ்ட்லி யான உடைகளை சிலரை மட்டும் வாங்க வைக்கிறதுல எனக்கு உடன்பாடில்லை. நான் டிசைன் பண்ற உடைகளை யார் வேணும்னாலும் போடலாம்ங்கிற மாதிரி உறுத்தாம சிம்பிளா பண்றேன்” என்கிறவர், தன் வருமானத்தை உடன் இருக்கும் இரண்டு பேருடன் பகிர்ந்து கொள்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்