தமிழ்ப் பெண்ணின் விவசாயப் புரட்சி!

சாதனைஸ்ரீலோபாமுத்ரா

றட்சி வாட்டியெடுக்க, விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொள்ளும் விதார்பா பகுதியை தன்னகத்தே கொண்டது மகாராஷ்டிரா. அதே மாநிலத்தின் மற்றொரு பகுதியான லாட்டூர், ஒஸ்மனாபாத், வாஷிம் மற்றும் நான்டேட் மாவட்டங்களில் வறட்சிக்கு நடுவேயும் விவசாயத்தில் வருமானம் பார்ப்பது ஆச்சர்யமான செய்தி. இந்தப் புதிய முயற்சிக்குப் பின்புலமாக இருப்பவர், பிரேமா கோபாலன் என்ற தமிழ்ப் பெண்!

சமூகப் பணியில் முதுகலைப் பட்டம், ஒடுக்கப்பட்ட பெண்கள் குறித்த ஆராய்ச்சியில் எம்.ஃபில் பட்டம், சமூக சேவையில விருதுகள் என பல மணிமகுடங்களை தக்கவைத்திருக்கும் அவரைச் சந்தித்தோம்.

‘`அது 1993-ம் ஆண்டு... லாட்டூர் மற்றும் ஒஸ்மனாபாத் மாவட்டங்களில் ஏற்பட்ட கடும் பூகம்பத்தால் பலர் வீடிழந்து அவதிப்பட்டனர். அப்போது ஒவ்வொரு ஊரிலும் மகளிர் குழுக்களை ஏற்படுத்தி, சிதில மடைந்த வீடுகளைப் புனரமைக்கவும், புது வீடுகளைக் கட்டுவதற்கும் உதவினோம். இந்தக் குழுக்களின் வளர்ச்சி தற்போது ஆலமரம் போல விரிவடைந்திருக்கிறது'' எனும் பிரேமா, ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடு களின் நடைமுறைகளைப் பின்பற்றி இந்தக் குழுக்களின் செயல்பாடுகளை வடிவமைத்திருக்கிறார்.

‘`சில வருடங்களுக்கு முன், மீண்டும் மகாராஷ்டிராவில் கடும் வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் பலர் தற்கொலை செய்துகொண்டனர். அப்போது மகளிர் குழுப்பெண்கள் தங்கள் கணவர்களிடம், ‘காய்கறி மற்றும் குடும்பத்துக்குத் தேவையான உணவு தானியங்களை நாங்கள் பயிரிடுகிறோம். விவசாய நிலத்தில் ஒரு சிறுபகுதியை எங்களுக்கென ஒதுக்கிக் கொடுங்கள்’ எனக் கேட்டிருக்கிறார்கள். அவர்களோ, `அதெல்லாம் உங்களால் முடியாத காரியம்' என்று கண்டிப்புடன் மறுத்திருக்கிறார்கள். தொடர்ந்து முயற்சித்ததில் அரைமனதாக விவசாயம் செய்ய சம்மதித்திருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்