திருப்பதி லட்டு - பிரசாதம் 1998

அவள் கிளாஸிக்ஸ்

திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் லட்டு பிரசாதமானது எப்படி?

300 ஆண்டுகளுக்கு முன்... பெருமாளைத் தரிசிக்க வருபவர்கள் ஊர் திரும்பும்போது மகிழ்ச்சியாகச் செல்ல வேண்டும் என்று தேவஸ்தானம் நினைத்தது. அதனால், சுவாமி தரிசனம் முடித்து வெளியே வருபவர்களுக்கு குட்டிக் குட்டி லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. பிறகு, இது அளவிலும் புகழிலும் பெரிதாக வளர்ந்தது. `லட்டு படி சேவா’ என்கிற சிறப்பு தரிசனங்கள் உருவாக்கும் அளவுக்கு திருப்பதி லட்டின் பெருமை கூடியது. திருமலை சந்நிதானத்தின் உள்ளேயே லட்டு தயாரிக்கும் பிரமாண்ட மடப்பள்ளி உள்ளது. ஒரு நாளைக்கு (1998-ல்) சுமார் ஐம்பதாயிரம் லட்டுகள் தயாரிக்கப்பட்டன. இப்போது தினம் 3 லட்சம்! லட்டு தயாரிப்புக்கென 620 பேர் வேலை செய்கிறார்கள். இதில் பெரும்பான்மையோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்