இந்திய தீபாவளிகளில் முதன் முறையாக... கல்லூரிப் பெண்கள் கிண்டிய கஷ்மீர் அல்வா!

கல்லூரிப் பெண்கள் - 2009அவள் கிளாஸிக்ஸ்

‘விக்கலுக்குக்கூட கிச்சன் பக்கம் ஒதுங்காத டீன் வாலாக்களுக்கு ஏதாச்சும் ஒரு தீபாவளி ஸ்வீட் செய்யக் கத்துக் கொடுக்கணும்... நம்ம உடல், பொருள், ஆவி(!) எல்லாத்தையும் கொடுத்தாவது!’ - இப்படி ஒரு நல்ல்ல்ல்லெண்ணம்(!) நம்ம மனசுல மத்தாப்பா பூத்துச்சே!

‘சமையலா... அய்யய்யய்யய்யோ... நான் வரலை’னு ஏதோ காண்டாமிருகத்துக்கு கால் நகம் வெட்டி விடறதுக்கு கூப்பிட்ட மாதிரி பொண்ணுங்க எல்லாம் ஓவரா எகிற ஒருவழியா, ‘எஸ்... லெட்ஸ் டூ!’னு தெகிரியமா(!) வந்தாங்க கோவை ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில படிக்கற கண்மணிகள்!

அடுத்த சில மணி நேரங்கள்ல அந்த அஞ்சு பொண்ணுங்களையும் கூப்பிட்டுக்கிட்டு கோவை, ‘பார்ஷன் அபார்ட்மென்ட்’ல இருக்கற அம்பிகா மேம் வீட்டுல ஆஜரானோம். மேம்தான் கிளாஸ் எடுக்கப்போற ‘செஃப்’ பரஸ்பர இன்ட்ரோவுக்கு அப்புறம் கிச்சனுக்குள்ள நுழைஞ்சதும், மொத்த டீமும் பண்ணின அதகளத்துல அந்த கிச்சனே கல்லூரி கேன்டீனாகிப் போச்சு!

‘‘அக்கா... ரெட் கலர்ல இருக்கே இதான் சிலிண்டரா?!’’னு கிச்சனை பத்தி கிஞ்சித்தும் தெரியாதது போலவே வனிதா கலாய்க்க, அவங்கள மத்த வாலுக எல்லாம் கலாய்க்க, தாங்க முடியாம ‘சைலன்ட்!’னு ‘டீச்சர்’ கியர் எடுத்தாங்க அம்பிகா. ‘‘இப்போ நான் உங்களுக்கு சௌராஷ்டிரா ஸ்டைல்ல ‘கஷ்மீர் அல்வா’ செய்ய கத்து தரப்போறேன்!’’னு சின்சியரா ஆரம்பிச்சாங்க அம்பிகா.

மளமளவென ‘கஷ்மீர் அல்வா’ பண்றதுக்கான பொருட்களை எடுத்து வெச்ச அம்பிகா, ‘‘முதல்ல பிரெட் ஸ்லைஸை நல்லா டோஸ்ட் பண்ணிக்கணும். ஆறு பேருக்கு பண்றதால அஞ்சு ஸ்லைஸ் எடுத்துக்கிட்டேன். பிரெட் நல்லா மொறுமொறுனு ஆனதும் அதை மிக்ஸியில போட்டு அடிச்சு பவுடர் பண்ணிட்டு, சலிச்சு எடுத்துக்கணும். குக்கர்ல அந்த பவுடரைக் கொட்டி, அதைவிட ரெண்டு மடங்கு தண்ணீரை ஊத்தி, ஸ்டவ் பத்த வெக்கணும்’’னு முதல் ஸ்டெப்பை முடிச்சதுமே,

‘‘அக்கா... பக்காவா பத்த வைக்கிறீங்க!’’னு வித்யா கிண்டல் பண்ண, அதிரும்படி சிரிச்சவங்களை விசிலடிச்சு அவுட்டாக்குச்சு குக்கர்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்