மனுஷி - 2

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தாலாட்டுசுபா கண்ணன் - ஓவியங்கள்: ஸ்யாம்

ரு குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்தால், அம்பிகையே வந்து பிறந்ததாக ஐதீகம் என்பார்கள் முன்னோர்கள். தென்மாவட்டங்களில் தலைச்சன் குழந்தை பெண் குழந்தையாகப் பிறந்தால்  மஹாலக்ஷ்மியே வந்து பிறந்ததாகக் கொண்டாடி மகிழ்வார்கள். இப்படி சத்தமில்லாமல் பெண் குழந்தைகளை நம் முன்னோர்கள் கொண்டாடியிருக்கிறார்கள் என் பதை வரலாற்றை சற்று தூசுதட்டி பார்த்தால் தெரியும்கொஞ்சம் நம் வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தால், குழவிப் பருவம் முதல் கிழவிப் பருவம் வரை ஆண்களைவிட பெண்களுக்கே நமது தர்மம் அதிக முன்னுரிமை அளிக்கிறது என்பதை அறிய முடியும். ஆன்மிக வழிபாடுகளில், உற்சவங்களில் எல்லாம் கன்னிப் பெண், மங்கை, மடந்தை, சுமங்கலி எனப் பெண்களுக்கே முதலிடம். தவம், யாகம், ஹோமம் எல்லாம் ஆண்களுக்கே! பெண்கள் ஏதும் செய்யாமல் போனாலும், கணவன் செய்யும் ஆன்மிகக் கைங்கர்யங்களில் கிடைக்கும் புண்ணியத்தில் பாதி மனைவிக்கும் கிடைத்துவிடும் என்கிறது சாஸ்திரம். அதே நேரம், கணவனின் பாவத்தில் துளியும் மனைவிக்குச் சேராது. ஆண்களுக்கே சந்நியாஸம். பெண்கள் தனியாக துறவெல்லாம் மேற்கொள்ள வேண்டியதில்லை. இப்படிச் சடங்குகள், சம்பிரதாயங்கள், குடும்ப விசேஷங்கள், கிராமப் பண்டிகைகள், விழாக்கள் மூலம் மிகவும் சுலபமாகப் பெண்களைப் படிப்படியாக தெய்விக தன்மையை அடையச் செய்துவிடுகிறது நமது சனாதன தர்மம்.

அநேக வீடுகளில் முதலில் பிறக்கும் பெண் குழந்தையே அடுத்ததாக பிறக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் இரண்டாம் தாயாகிறாள். அவர்களாலேயே அடுத்த தம்பி, தங்கைகளின் திரு மணம், வேலை, நல்லது கெட்டது அனைத்தும் நடக்கும் என்பது மட்டும் மாறாத ஒரு மாற்றமாகியிருக் கிறது. அதுசரி, குழந்தைகள் பிறந்ததும் பாடப்படும் தாலாட்டுப் பாடல் எப்படி உருவானது என்று தெரியுமா? 

தால் என்றால் நாக்கு. நாக்கைச் சுழற்றியும், ஆட்டியும் ரா… ரா… ரா… லு… லு… லு… என்று தொடங்கிப் பாடுவதால் இது தாலாட்டு என்று பெயர் பெற்றது. இது ஆராட்டு, ரோராட்டு, ஓராட்டு, தாராட்டு, தொட்டிப் பாட்டு, தூரிப் பாட்டு என்று பலவகையாகக் குறிக்கப் படுகிறது. தாலாட்டுப் பாடல்கள் பெரும்பாலும் நீலாம்பரி என்னும் இன்ப மூட்டும் ராகத்திலேயே பாடப்படுகின்றன. எனினும், யதுகுலகாம்போதி, சஹானா, ஆனந்தபைரவி போன்ற ராகங்களிலும் இவை இசைக்கப்படுகின்றன. தாலாட்டுப் பாடல்களில் குழந்தையின் அருமை, மாமன் பெருமை, குலப்பெருமை போன்றவை இடம்பெறும். தத்ரூபமான உவமை, உருவக அணிகள் கையாளப்படும். அப்படி பாடப்பட்ட ஒரு தாலாட்டு பாடலை பாருங்கள்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்