டயட் டூர் - 1

உணவுஇளங்கோ கிருஷ்ணன்

லைவாழை இலை போட்டுப் பரிமாறும் நம் மரபில், ஒபிஸிட்டி எனும் அதிக உடல் எடைப் பிரச்னை எப்படி வந்தது என்பது மில்லியன் டாலர் கேள்வி. அதற்கான விடையைத்தான் டயட்டீஷியன் ஷைனியுடன் சேர்ந்து நாம் இந்தத் தொடரில் தேட முற்படுகிறோம்.

இட்லி, தோசை, சட்னி,் சாதம், சாம்பார், ரசம், தயிர், பொரியல், அவியல், கூட்டு, கீரை என இடைவெளியே இல்லாமல் இலையை நிறைத்துச் சாப்பிடும் உணவிலும் ஏதோ குறை இருப்பதாக நினைக்கிறோம். அதனால்தான், வழக்கமான உணவுகளை விடுத்து, புதுப் புது உணவு வகைகளைத் தேடிப்போகிறோம். உண்மையில், நம்முடைய உணவு முறையில் எந்தக் குறைபாடும் இல்லை. நமது உணவு முறையை சமச்சீர் உணவுமுறை என்பார்கள்.

நம்முடைய உணவான அரிசி, கோதுமை போன்றவற்றில் மாவுச்சத்து உள்ளது. அசைவ உணவுகள், எண்ணெய் போன்றவற்றில் கொழுப்புச்சத்து உள்ளது. பருப்புகள், விதைகள், சிறுதானியங்களில் புரதச்சத்து உள்ளது. பொரியலாகச் சாப்பிடும் காய்கறிகள், கீரைகளிலும் பழங்களிலும் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், நார்ச்சத்து, நீர்ச்சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள் ஆகியவை உள்ளன. இப்படி அடிப்படையான அனைத்துச் சத்துக் களும் நம் மரபான உணவுமுறையிலேயே நமக்குக் கிடைத்துவிடுகின்றன. அதையும் மீறி ஒபிஸிட்டி எப்படி ஏற்படுகிறது?

அரக்கப் பரக்க சாப்பிட்டுவிட்டு அலுவல கத்து ஓடி, அங்கே போய் வாழ்நாள் முழுவதும் அரிசி சாதத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தால் பேலன்ஸ் டயட்டும் கிடைக்காது, உடலுக்கு தேவையான சத்தும் கிடைக்காது. சரி அப்படியென்றால் எதுதான் பேலன்ஸ் டயட்?

- அடுத்த இதழில் பார்ப்போம்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்