நோய்க்கு நோ நோ!

வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்பாதுகாப்பு

டிக்கடி மழை, வெயில் என சீதோஷ்ண நிலைமை மாறிக்கொண் டிருக்கும் இவ்வேளையில் காய்ச்சல், ஜலதோஷம் என்று அவதிப்படுபவர்களுக்கும் மழைக்காலங்களுக்கு முன்பு என்னமாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் நோய்கள் நம்மைத் தாக்காது என்பது குறித்த ஆலோசனைகள் தருகிறார் சென்னையைச் சேர்ந்த பொதுமருத்துவர் டாக்டர் சுந்தரராமன்.

னிதனின் உடலில் இருந்து வெளிப்படும் வியர்வை வாடை, சுவாசித்தலின்போது வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடு, உடலின் வெப்பம் ஆகியவை கொசுக்களை ஈர்க்கும், எனவே, ஆடைகளைத் துவைத்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆடைகளை ஒரே இடத்தில் தேங்க விட்டாலே கொசுக்கள் அங்கு மொய்க்கும். கொசுக்களை தவிர்த்தாலே நமக்கு வருகிற பாதி நோய்களைக் கட்டுப்படுத்திவிடலாம்.

வீட்டில் உள்ள ஏ.சி-யை சுத்தப்படுத்தி வையுங்கள். அதில் இருக்கும் தூசுகள் காரணமாக குழந்தைகளுக்கு அலர்ஜி, ஜலதோஷம் போன்றவை எளிதாக வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். தண்ணீரை நன்கு காய்ச்சி ஆறவைத்துப் பருகுங்கள்.

டெங்கு காய்ச்சல் உள்ள நபர் சிகிச்சை எடுக்கும் போது, அவரை மீண்டும் கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அவர்களைக் கடிக்கும் கொசு மற்றவர்களைக் கடித்தால் டெங்கு பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிவிடும்.

நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றும் சேர்ந்த திரிபலா சூரணப் பொடியை, ஒன்று (அ) இரண்டு டீஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, தினமும் இரவில் படுக்கப்போகும் முன் அருந்துவது மிகவும் நல்லது. இதனை வாரம் 3 நாட்கள் குடித்துவந்தாலே நோய் எதிர்ப்புச்சக்தி ஏற்பட்டு நோய்கள் எளிதில் நம்மை அண்டாது... குறிப்பாக காய்ச்சல், ஜலதோஷம் போன்றவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்