பூக்கள் பூக்கும் தருணம்!

டீன் ஏஜ் ஹெல்த் ச.மோகனப்பிரியா, ஓவியம்: எஸ்.ஏ.வி இளையபாரதி

‘மலரே...’ என மலர் டீச்சரை அழைப்பதைப் போலவே பெண்களை மலரோடு ஒப்பிடுகிறோம். மலருக்கு பூக்கும் பருவம் வருவதைப்போலவே பெண்ணுக்கும் பூப்பெய்தும் பருவம். இக்காலகட்டத்தில் உடல் மற்றும் மனரீதியான மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. இந்தச் சூழலில் பெண்குழந்தைகளுக்குத் தேவையான விழிப்பு உணர்வை எப்படி, யார் கற்றுத் தருவது? அது ஏன் அம்மாவாக இருக்கக் கூடாது! பெண் குழந்தைகள் பூப்பெய்துதல் பருவம் வருகையில் அவர்களை எப்படித் தயார் செய்ய வேண்டும்? டிப்ஸ் அளிக்கிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி.

 *குழந்தைப் பருவத்தில் இருந்து, பதின்பருவத்தை அடைகிற நிலையே பூப்பெய்துதல். இப்பொழுதில் உடல் அளவிலும் மனதளவிலும் மாற்றங்கள் அடைவதும் வளர்ச்சிக்கான அறிகுறியே என தெளிவுபடுத்த வேண்டும்.

 *பொதுவாக, பருவம் எய்தும் காலகட்டம் 11 - 14 வயது. உடல்நிலையைப் பொறுத்து இது மாறக்கூடும். இன்னும் இளம் வயதிலேயேகூட பூப்பெய்துகின்றனர். எனவே, சற்று முன்னரே குழந்தைகளிடம் மாதவிடாய் பற்றி சொல்லித்தர வேண்டும்.

 *
எட்டு அல்லது ஒன்பது வயது தொடங்கிய பெண்குழந்தைகளிடம், `உன் மார்பகப் பகுதிகள் வளர்ச்சியடையும். இந்த வளர்ச்சி இரண்டு - மூன்று ஆண்டுகள் வரை இருக்கலாம். சிலருக்கு ஒரு மார்பகம் அதிக வளர்ச்சியும், இன்னொரு மார்பகம் சற்று குறைவான வளர்ச்சியாகவும் இருக்கலாம். பயம் தேவை இல்லை. இது இயல்புதான்' என்று உணர்த்த வேண்டும்.

* `அக்குள் பகுதி மற்றும் அந்தரங்கப் பகுதிகளிலும் ரோமம் வளரும். அப்படி வளரும்போது, பூப்பெய்துதலுக்குத் தயாராகிறாய்' என்பதையும் கூற வேண்டும்.

 *
மாதவிடாய் என்பது பிறப்புறுப் பிலிருந்து ரத்தம் கசிவது. இது இயற்கையான செயல். உடலில் ஏற்படும் மாற்றம். 3-5 நாட்கள் வரை நீடிக்கும். மலம், சிறுநீர் போல இந்த குருதிப்போக்கும் ஒருகழிவுதான் என்பதைப் புரியவைக்க வேண்டும். இது நோய் கிடையாது. வளர்ச்சியின் அடையாளமே என்பதையும் உணர்த்த வேண்டும்.

 * ஏன் இப்படி என்று கேட்டால், பெண்ணாக இருந்து தாய்மை அடைவதற்கான வளர்ச்சி என்று சொல்லித்தரலாம். பெண் குழந்தைகள் குறிப்பிட்ட வயதில் பூப்பெய்துவர். இதன் அடையாளமாக, பிறப்புறுப்பில் குருதிப்போக்கு ஏற்படும் எனச் சொல்லிக்கொடுத்தால், பூப்பெய்தும்போது தேவை இல்லாத பயமும் குழப்பமும் ஏற்படுவது தடுக்கப்படும்.

* சானிட்டரி நாப்கினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை முன்னரே கற்றுக்கொடுப்பதால், நீங்கள் இல்லாதபோது, பள்ளியில் முதன்முதலாக மாதவிடாய் வந்தால் உதவியாக இருக்கும். இதை ஒரு நோயாகக் கருதுவதும் தவிர்க்கப்படும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்