கிணற்றிலும் குளத்திலும் பயிற்சி!

நட்சத்திரம் - மாற்றுத்திறன் நீச்சல் ச.புகழேந்தி, படங்கள்: தே.சிலம்பரசன்

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள வரஞ்சரம் என்ற கிராமத்தைச்சேர்ந்த எளிய குடும்பத்துப் பெண், 26 வயது பரிமளா. இவருடைய பெற்றோர் கூலி வேலைக்குச் செல்பவர்கள். பரிமளாவோ போலியோவால் ஒரு காலின் செயல்பாடு இழந்த மாற்றுத் திறனாளி. இந்தக் கஷ்டங்களை எல்லாம் கடந்து ‘தேசிய நீச்சல் வெற்றியாளர்’ என்ற சாதனையை தனது அடையாளமாக்கி இருக்கிறார் பரிமளா!

‘`எட்டு மாசக் குழந்தையா இருக்கும்போது, போலியோவால வலது கால்ல பாதிப்பு ஏற்பட்டது. சின்ன வயசுல ஒண்ணும் தெரியல. ஆனா, வளர வளர அது என்னோட தன்னம்பிக்கையைப் பாதிச்சது. நல்லவேளையா, கல்லூரி நண்பர்கள் தங்கள் அன்பாலும் ஊக்கத்தாலும் என் குறைபாட்டை மறக்கச் செய்தாங்க. மாற்றுத்திறனாளிகளுக்காக சென்னையில் நடந்த ஒரு நீச்சல்போட்டி பற்றிச் சொல்லி, ‘நீ கலந்துக்கோயேன்’னு என் வாழ்க்கைக்கான முதல் வெளிச்சத்தைக் காட்டினதும் அவங்கதான். எங்க ஊரு கிணத்துல அப்பா எனக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருந்தார். அந்த தைரியத்துல, பெரிய பயிற்சின்னு எதுவும் இல்லாமலே, 2013-ல் சென்னையில் நடந்த மாநிலப் போட்டியில ரெண்டு தங்க மெடல்கள் வாங்கினேன்.  பயிற்சியாளரே இல்லாம வெற்றிபெற்ற என்னைப் பார்த்த தேனியைச் சேர்ந்த நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார், எனக்கு முறையா நீச்சல் பயிற்சி அளிக்க முன்வந்தார்’’ என்று மகிழ்ச்சியுடன் சொல்லும் பரிமளா, மாதத்தில் மூன்று நாட்கள் திண்டுக்கல் சென்றும், மற்ற நாட்களில் தன் ஊரின் கிணறு, குளங்களிலும் பயிற்சி எடுக்கிறார். தேசிய அளவில் மூன்று, தென்மண்டல அளவில் ஆறு, மாநில அளவில் 21 என மெடல்கள் குவித்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்