“என் வலி, இன்னொரு தாய்க்கு வேண்டாம்!”

இதயம் காக்கும் இதயம்ஆர்.வைதேகி

‘`இதய நோய்கள் பெரியவங்களுக்கும் வயசானவங்களுக்கும்தான் வரும்னு இல்லை. குழந்தைகள் பிறக்கும்போதே இதயக் கோளாறுகள் இருக்கலாம். இதை கன்ஜெனிட்டல் ஹார்ட் டிசீஸ்னு (Congenital Heart Disease)  சொல்றோம். பிறவிக் குறைபாடுகளோட குழந்தைங்க பிறந்து இறந்து போறதுக்கு இது ஒரு முக்கிய காரணம். உலக அளவுல ஆயிரத்தில ஒரு குழந்தையும் இந்தியாவுல நூறுல ஒரு குழந்தையும் இது மாதிரியான பிரச்னையோட பிறக்கறாங்க. நோய் என்ன ஏழை, பணக்காரங்க வித்தியாசம் பார்த்தா வருது? ஏழைக் குழந்தைங்க இந்தப் பிரச்னையோட பிறக்கும்போது, செலவு பண்ண வசதியில்லாம குழந்தையைப் பறிகொடுக்கிற சோகத்தை என்னனு சொல்றது?’’ - கண்களில் மென்சோகம் தெரியப் பேச ஆரம்பிக்கிறார் சித்ரா விஸ்வநாதன். சென்னையில் இயங்கும் ஐஸ்வர்யா ட்ரஸ்ட்டின் நிர்வாகி. இதய நோய்களால் பாதிக்கப்பட்டு, இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு தனது ட்ரஸ்ட்டின் மூலம் இலவச சிகிச்சைகள் அளித்து இன்னொரு வாழ்க்கைக்கு வழிகாட்டுபவர்.

``ஐஸ்வர்யா எங்களோட ரெண்டாவது மகள். அவ பிறந்த 40-வது நாள்... ஹார்ட்டுலேருந்து வித்தியாசமான சத்தம் வந்தது. டாக்டர்ஸ் டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டு, அவளுக்கு இதயத்துல பெரிய பிரச்னை இருக்கிறதா சொன்னாங்க. அவளோட இதயத்துல உள்ள நல்ல ரத்தமும் கெட்ட ரத்தமும் கலந்துடக்கூடாதுனு சொல்லி, அதுக்காக ஆபரேஷன் பண்ணினாங்க. மூன்றரை வயசுல மறுபடி பிரச்னை... இன்னொரு ஆபரேஷன் பண்ணினோம். அதுக்கப்புறம் அவ ரொம்ப மோசமாயிட்டா... ரெண்டு மாசம் ஐ.சி.யு-ல வெச்சிருந்தோம். பெரிய பெரிய டாக்டர்ஸ், காஸ்ட்லியான சிகிச்சைகள்... ரொம்ப முயற்சி பண்ணினோம். பலனில்லை... ஐஸ்வர்யா எங்களைவிட்டுப் போயிட்டா....’’ - வழியக் காத்திருக்கிற கண்ணீரை விழாமல் தடுத்தபடி தொடர்கிறார் சித்ரா.

``என் குழந்தைக்கு மட்டும் ஏன் இப்படி ஆகணும்னு பல மாசங்கள்... பல வருஷங்கள் கதறித் துடிச்சிருக்கேன். அப்பதான் இதுபோல தினம் தினம் எங்கயோ ஒரு தாய், தன் குழந்தையைப் பறிகொடுத்துட்டிருக்காங்கனு தெரிய வந்தது. குழந்தை, தாயோட வயித்துல இருக்கும் போது, அதோட இதயம் சரியா உருவாகாமப் போகலாம். அல்லது ரத்தக் குழாய்கள்ல பிரச்னை இருக்கலாம். இதை 20 வாரக் கர்ப்பத்துலயோ, குழந்தை பிறந்த உடனேயோ ஸ்கேன் மூலமா கண்டு
பிடிக்கலாம். சில குழந்தைகளுக்கு ஆபரேஷன் மட்டும்தான் தீர்வா இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்