”சட்டம் எப்போதும் பலமான ஆயுதம் அல்ல!”

மாத்தி யோசி ஆர்.வைதேகி

குலிகா ரெட்டிக்கு வயது 27. இவரின் ரெஸ்யூமில் இருப்பவை எல்லாமே வித்தியாசமானவை, முக்கியமானவை. பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள், தெற்காசிய அகதிகளின் உரிமைகள், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், ஹெச்.ஐ.வி உள்ளிட்ட பால்வினை நோய் தாக்கியவர்களுக்கான உரிமைகள், குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத குடிசைவாழ் மக்களின் உரிமைகள் என குலிகா குரல் கொடுக்காத ஏரியாக்களே இல்லை!

மாற்றி யோசித்தது மட்டுமல்ல... இளைய தலைமுறையினரை மாற்றி யோசிக்கவும் வைத்ததுதான் பெங்களூரைச்சேர்ந்த இந்த குலிகாவின் வெற்றி!

``சின்ன வயசுலேருந்தே எனக்கு வழக்கறிஞராகணும்னு ஆசை. அப்பதான் சமூகத்துல மாற்றத்தைக் கொண்டு வர முடியும்னு ஓர் எண்ணம். வழக்கறிஞரான பிறகுதான் நிதர்சனம் புரிஞ்சது. பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள்ல எவ்வளவு அலட்சியம் காட்டப்படுதுங்கிறதையும் உணர்ந்தேன். தன்னோட திருமண உறவுல பிரச்னை இருக்கிறதா புகார் கொடுக்க வந்த ஒரு பெண்கிட்ட ‘காதலர் தினத்தன்னிக்கு உன் புருஷனுக்கு ரோஜாப் பூ கொடுத்து சமாதானமாகப் போக முயற்சி செய்’னு ஒரு வழக்கறிஞர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனேன். அதுமட்டுமல்ல... பாலியல் வன்கொடுமைகளால பாதிக்கப்படற பெண்களோட வழக்குகளை விசாரிக்கிற வழக்கறிஞர்கள் கொஞ்சமும் பொறுப்பே இல்லாத கமென்ட்டுகளை வீசறதையும் பார்த்திருக்கேன். வன்கொடுமைப் பிரச்னையை சீரியஸா அணுகாத மெத்தனத்தை என்னனு சொல்றது? இதையெல்லாம் மாத்திடணும்னு நினைச்சேன். ஆனா, இந்த விஷயங்கள் நம்ம சமுதாயத்துல ரொம்ப ஆழமா வேரோடிப் போயிருந்தது தெரிஞ்சது...’’ - சின்ன மௌனம் விட்டுத் தொடர்கிற குலிகாவின் பேச்சு, திரைமறைவு நீதிமன்றக் காட்சிகளைநமக்கு விவரிக்கின்றன.

``மனித உரிமைகளுக்கான வழக்கறிஞரா பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சபோது, வெறும் சட்டம் மட்டுமே நீதியை வாங்கித் தந்துடாதுங்கிறதை உணர்ந்தேன். ஒரு வழக்கறிஞரா நம்ம கிளையன்ட்டோட வாழ்க்கையில மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தறோம். சில வழக்குகள்ல அதை நான் உணர்ந்திருக்கேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்