"அன்னை தெரசாவின் சுருக்கங்கள்தான் பேரழகு!”

மிஸஸ் இந்தியா எர்த் இரா.கலைச்செல்வன், படம்: த.ஸ்ரீனிவாசன்

‘இந்த சமூகத்துக்கு நீங்கள் கொடுப்பவரா... இல்லை எடுப்பவரா?’ - இது கேள்வி. பெரும்பாலானோர் தாங்கள் கொடுத்ததை முன்னிறுத்தியே பேசினர். சற்றே உயரமான உருவம், முகத்தில் சிறு மச்சம், கருநிற கூந்தல், நீல நிற உடையில் நின்றிருந்த ஜெயாவிடம் (ஜெயஸ்ரீ) மைக் கொடுக்கப்பட்டது.

‘‘உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். நான் இரண்டுமேதான். கொடுப்பதற்காக எடுக்கிறேன். எடுப்பதற்காக கொடுக்கிறேன்...’’

ஆம்... 2016-ம் ஆண்டுக்கான ‘மிஸஸ் இந்தியா எர்த்’ ஆக முடிசூட்டப்பட்டிருக்கிறார் ஜெயா மகேஷ். இது அழகுக்்கான போட்டி மட்டுமே அல்ல. ஆரோக்கியம், சமூக விழிப்பு உணர்வு, சமூகப் பங்களிப்பு ஆகியவற்றோடு கொஞ்சம் புற அழகு... இவற்றை அடிப்படையாகக் கொண்டே பட்டம் வழங்கப்படுகிறது. கடந்த இருபதாண்டுகளாக, பெண்கள் நலம் சார்ந்த பணிகள், மரம் வளர்ப்பு போன்றவற்றில் ஈடுபட்டதற்காகவும், வியக்கத்தக்க வகையில் தன் உடலை அழகாக பராமரித்ததற்காகவும் ஜெயா மகேஷ் இப்பட்டத்தை வென்றுள்ளார்.

கோவையைச் சேர்ந்த ஜெயா மகேஷ், ‘பாடி ஸ்கல்ப்டிங்’ என்ற பெயரில் பெண்களுக்கான உடல் மற்றும் மனநல ஆரோக்கியத்துக்்கான வகுப்புகளை எடுத்து வருகிறார். இந்தியா முழுவதிலுமிருந்து 41 பேர் கலந்துகொண்ட திருமதிகளுக்கான இப்போட்டியில் வென்ற ஜெயா மகேஷ்தான், பங்கேற்பாளர்களிலேயே அதிக வயதானவர். அவரின் வயது... 48!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்