கோபம் குறைக்க... நினைவாற்றல் பெருக!

குருகுலம் ஆர்.வைதேகி

பொருளாதாரம் படித்த ஒருவரின் தேடல் எப்படி இருக்கும்? பணத்தையும் பிசினஸையும் பெருக்குவது பற்றி..? சம்பாதிப் பதையும் சேமிப்பதையும் பற்றி..? ஆனால், பெங்களூரைச் சேர்ந்த திவ்யா துரைசாமியின் தேடலோ வேறு... ‘குருகுலம்’ என்ற பெயரில் பெங்களூரில் ஸ்லோகப் பள்ளி நடத்துகிறார்!

``படிப்பை முடிச்சதும் பல இடங்கள்ல வேலை பார்த்தேன். கொஞ்ச நாள் வீட்ல சும்மா இருந்தேன். என்னோட வாழ்க்கையில கஷ்டங்கள் வந்தபோது, நான் ஸ்லோகங்கள் கத்துக்க ஆரம்பிச்சேன். அப்படியே அந்த ஈர்ப்பு அதிகமானது. நான் கத்துக்கிட்ட ஸ்லோகங்களைக் குழந்தைங்களுக்கு சொல்லிக் கொடுக்கலாமேனு தோணினது. 2014 அக்டோபர்ல என் அப்பார்ட்மென்ட்டுல உள்ள 6 குழந்தைங்களை வெச்சு ‘குருகுலம்’ ஸ்லோகா ஸ்கூல் தொடங்கினேன். 4 முதல் 16 வயசு வரையிலான குழந்தைங்க இந்த வகுப்புகளுக்கு வராங்க...’’ என்கிற திவ்யா, மொபைல் பள்ளியாகவே இதை நடத்துகிறார்.

``அப்பார்ட்மென்ட்ஸ், ப்ரீ ஸ்கூல்ஸ், டான்ஸ் ஸ்கூல்ஸ், ஸ்டுடியோஸ்னு பல இடங்களுக்கும் போய் ஸ்லோக வகுப்புகள் எடுக்கறேன். இதைத் தவிர வீடுகளுக்கும் போய் வகுப்புகள் எடுக்கறேன். அது அம்மா-குழந்தைனு ரெண்டு பேருக்குமானது. அதாவது 2 வயசுக் குழந்தைங்க அவங்க அம்மாவோட சேர்ந்து ஸ்லோகங்கள் கத்துப்பாங்க. அம்மாவோட சேர்ந்து கத்துக்கிறது அந்தக் குழந்தைக்குப் பிடிச்ச விஷயமா இருக்கிறதோட, ஆர்வமா கத்துக்கவும் வாய்ப்பா அமையும். அம்மா சொல்றதைக் கேட்டு தானும் கூடவே சொல்லும்...’’ என்கிறவர், தனது ஸ்லோக பயிற்சி வகுப்புகளை மாற்றுத்திறனாளிகளுக்கும் பார்வையற்றோருக்கும் சேவையாகக் கொண்டு போகிற திட்டத்தில் இருக்கிறாராம்.

சொல்லிக் கொடுக்க எத்தனையோ விஷயங் கள் இருக்க, ஸ்லோகங்கள் ஏன்?

``இன்னைக்கு குழந்தைங்க ரொம்ப சின்ன வயசுலயே வன்முறைக்குப் பழகறாங்க. கெட்ட வார்த்தைகள் பேசறாங்க. சகிப்புத்தன்மை இல்லாம வளர்றாங்க. ஸ்லோகங்களை உச்சரிக்கப் பழகற குழந்தைங்க, வன்முறையிலேருந்து விலகி இருப்பாங்க. அநாவசியமா கோபப்பட மாட்டாங்க. ஸ்லோகங்களை உச்சரிக்கிறது மூலமா அவங்களோட ஞாபகசக்தி மேம்படும். வாழ்க்கையைப் பற்றிய மதிப்பீடுகள் தெரிஞ்சு வளர்வாங்க. ஸ்லோகங்கள் படிக்கிற பிள்ளைங்களோட அணுகுமுறையில நிச்சயம் மாற்றத்தைப் பார்க்கலாம்...’’  - காரணம் சொல்லி முடிக்கிறார் திவ்யா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்