காப்பீட்டு கணிப்பு அறிவியல் படிப்பு... நிதித் துறைகளில் வேலைவாய்ப்பு!

கற்க கசடறச.ஆனந்தப்பிரியா, படம்: என்.ஜி.மணிகண்டன்

காப்பீட்டு கணிப்பு அறிவியல் (Actuarial Science) என்பது பலரும் பரவலாக அறியாதது. ஆனால், ஏராளமான தேவை உள்ள படிப்பு. இதுகுறித்த தகவல்களைப் பகிர்கிறார் திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியின் காப்பீட்டு கணிப்பு அறிவியல் துறைத் தலைவர் முனைவர் மாரியப்பன்.

கணிதம் (Mathematics), புள்ளியியல் (Statistics) ஆகியவற்றின் துணையோடு காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், பங்குச்சந்தை போன்ற துறைகளின் எதிர்காலச் செயல்பாடுகளைக் கணித்துச் சொல்வதுதான் இந்தத் துறை. பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம் - இயற்பியல் - வேதியியல் அல்லது காமர்ஸ் வித் பிசினஸ் மேத்தமேட்டிக்ஸ் எடுத்துப் படித்தவர்கள், காப்பீட்டு கணித அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

எங்கு?

தமிழ்நாட்டில் இளங்கலை பி.எஸ்ஸி., காப்பீட்டு கணிப்பு அறிவியல் படிப்பு திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியில் மட்டுமே உள்ளது. முதுகலைப் படிப்பான எம்.எஸ்ஸி, காப்பீட்டு கணிப்பு அறிவியல் பிஷப் ஹீபர் கல்லூரி, மெட்ராஸ் யுனிவர்சிட்டி, பி.எஸ்.அப்துர் ரஹ்மான் யுனிவர்ஸிட்டி, பெங்களூரு க்ரிஸ்ட் யுனிவர்ஸிட்டி, கேரளா எம்.ஏ.காலேஜ், மும்பை யுனிவர்ஸிட்டி ஆகியவற்றிலும் வழங்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்