அவசரத்துக்கும் அவசியத்துக்கும் ‘ஆப்’!

விகடன் ஹேக்கத்தான் ஞா.சக்திவேல்முருகன் படங்கள்: தி.குமரகுருபரன்

பெண்கள் தினசரி வாழ்க்கையில் எதிர் கொள்ளும் பிரச்னைகளுக்குத் தொழில்நுட்ப உதவியுடன் தீர்வுகிடைக்கச் செய்வது குறித்து பலவித ஐடியாக்களுடன், விகடன் ஹேக்கத்தான் நிகழ்வில் 40 குழுக்கள் கலந்துகொண்டார்கள்.  டாப் 10 குழுக்களில் சில முன்வைத்த `ஆப்' ஐடியாக்கள் இதோ!

“பெண்களுக்கும் வயதானவர்களுக்கும் அவசரம் அல்லது உடனடித் தேவை என்றால், அருகில் இருப்பவர் களுக்குத் தகவல் சென்றால்தான் அவசர உதவி கிடைக்கும் என்ற அடிப்படையில்தான் உருவாகிறது இந்த `ஆப்'. கையில் அணிந்திருக்கும் பட்டை அல்லது கைக்கடிகாரத்தில் உள்ள பட்டனை அழுத்தினாலே போதும்... அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்கிற விவரம், உடனே மொபைல்போன் மூலம் ஒன்றிரண்டு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருப்பவர்களுக்கு அலர்ட் மெசேஜ் ஆகச் சென்றுவிடும். இந்தச் செயல்முறைகளின்போது, உதவி கேட்பவர் மொபைல் இணைய இணைப்பில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒரு கிலோ மீட்டர் தூர அளவில் ஏதேனும் ஒரு போனில் இன்டர்நெட் வசதி இருந்தாலே போதும்” என்கிற கார்த்திக், ஆதித்யா, வெங்கடாசலம் குழுவினர், பெரும்புதூரில் உள்ள வெங்கடேஸ்வரா கல்லூரி கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்