பெண் Money - மை டியர் சேமிப்புப் புலிகளே!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பா.விஜயலட்சுமி

`வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ - எழுத்தாளர் அம்பையின் பிரபலமான சிறுகதை இது. ஒருகாலத்தில் நம்முடைய நாட்டில் பெண்களுக்கான இடமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது அடுப்படி மட்டும்தான். பொருளாதாரச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சமூகத்தின் ஏற்ற இறக்கங்களும் மாறிய பிறகுதான், பெண் சமூகமும் ஆண்களுக்கு நிகராக வேலை, பொறுப்பு, பதவி என்று பரந்து விரிந்துள்ளது. ராக்கெட் வேகத்தில் உயரும் விலைவாசியில் ஒருவரின் சம்பளம், குடும்பத்தை நடத்த போதுமானதாக இருப்பதில்லை. அதனாலோ என்னவோ, அலுவலகச் சூழலில் ஆண், பெண் பாகுபாடு இன்றைக்கு இல்லை.

ஆண்களைப் போல பெண்களும் சம்பாதித்தாலும், வாங்கும் சம்பளத்தை முழுவதுமாக கணவனிடம் கொடுத்துவிட்டு மறுநாள் அலுவலகம் செல்ல பேருந்துக் கட்டணத்துக்காக அவரிடம் பணம் கேட்டு நிற்கும் பெண்களும், அப்பாவிடம் கொடுக்க வேண்டிய சம்பளப் பணத்தில் ஐம்பது ரூபாய் செலவழித்தால்கூட அதற்கும் கணக்கு சொல்ல வேண்டிய மகள்களும் இன்னும் இருக்கிறார்கள். பல பெண்களின் வீட்டில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உள்பட நிதி சார்ந்த எல்லா விஷயங்களிலும் ஆண்கள் ராஜ்ஜியம்தான். பல வீடுகளில் மனைவியின் சேலரி அக்கவுன்ட் டெபிட் கார்டுகூட கணவரிடம்தான் இருக்கிறது.

பெண்ணுரிமை, பெண்களுக்கான சமூகம் என்று பொதுவெளியில் கொண்டாடப்படும் சமூகத்தில் ஏன் இந்த வேறுபாடுகள்? பருப்பு டப்பாவுக்குள்ளும் அரிசிப்பானைக்குள்ளும் சேமிப்புக் கணக்கைத் தொடங்கி, தனிவங்கி நடத்திய பெண்களுக்கு சேமிப்பும் நிதி நிர்வாகமும் தெரியாதா என்ன? தங்கத்தை கைகளிலும் கழுத்திலும் ஆபரணங்களாக மாற்றி எதிர்கால முதலீடாக சேமித்தவர்கள்தானே பெண்கள்? எல்லோருக்குள்ளும் இப்படிப் பட்டக் கேள்விகள் எழலாம். ஆனால், பெண்களுக்கு சேமிப்பு, முதலீடு, எதிர்கால வைப்புத்தொகை ஆகியவை குறித்த விழிப்பு உணர்வு இல்லை என்பதே உண்மை.

நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கும் இந்த ஹைடெக் உலகில் மாதாந்தர பட்ஜெட் போடுவதே பெரும்பாடு என்று பெண்கள் நினைக்கத் தொடங்கியதும்... கணவனோ, அப்பாவோ பொறுப்பாக எதிர்காலம் பற்றிய திட்டமிடலை மேற்கொள்வார்கள் என்கிற தப்பி ஓடும் மனநிலையும்தான்... இன்ஷூரன்ஸ், மெடிக்கிளெய்ம், ரிட்டயர்மென்ட் பிளான், பேங்க் அக்கவுன்ட் என்பதையெல்லாம் ஏலியன்களாகப் பார்க்க வைத்துள்ளன. புரியாத வற்றைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் நிலவும் தயக் கமும் இதற்கு முக்கிய காரணம். அந்த நிலையை மாற்றி பெண்களையும் ‘சேமிப்புப் புலி’களாக மாற்றுவதற்கான ஒரு துளி நீர் ஆதாரம்தான் அவள் விகடன் வழங்கும் இந்தப் பகுதி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்