மம்மியும் நானே... டாடியும் நானே!

வித்தியாசம்

 

தன் மகனை வழக்கம் போல காரில் பள்ளிக்குவிட பயணித்தார் அம்மா யவெட் வாஸ்க்விஸ் (Yevette Vasquez). 

``என்ன ஆச்சு... இன்னிக்கு உன் ஸ்கூல்ல இவ்ளோ கார்கள்?'' என்று கேட்கிறார் மகனிடம்.

“ஆமாம்மா... இன்னிக்கு ‘Donuts With Dad Day!” என்கிறான் மகன்.

அமெரிக்கப் பள்ளிகளில் பிரபலமான கான்செஃப்ட் `டோனட்ஸ் வித் டாட் டே'.

அதாவது பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தன் தந்தையை பள்ளிக்கு அழைத்து வந்து, அவர்களோடு ஒன்றாக டோனட் உண்பதே கான்செஃப்ட்.

மகன் கூறிய உடனே, காரை வீட்டுக்குத் திருப்புகிறார் யவெட். ஆண் உடையை அணிந்து ஒட்டு மீசை ஒட்டி கண்டே பிடிக்க முடியாதபடி வந்து அப்பாவாக வந்து நிற்கிறார்!

பிறகென்ன... மகனோடு பள்ளிக்குச் சென்று, `டோனட் டே' கொண்டாடி ஃபேஸ் புக்கில் `அவன் முகத்தில் ஒரு புன்னகையை பார்க்கவே இதைச் செய்தேன். என்னை வெறுத்துவிடாதீர்கள்' என்று ஸ்டேட்டஸ் தட்ட... `சூப்பர் மாம்' பட்டத்துடன் உலக பிரபலமாகிவிட்டார். அவரை ஃபேஸ்புக் மெசஞ்சரில் பிடித்து பேசினோம்.

''ஏமாற்றியதற்காகத் திட்டுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், பாராட்டுகளில் நெகிழ்ந்துவிட்டேன். சிங்கிள் பேரன்ட்டாக இருப்பவர்களுக்கு நான் ரோல் மாடல் என்று பலரும் சொன்னதை முக்கியமானதாக நினைக்கிறேன். என் மகன் இதை மறக்கவே மாட்டான்!” என்கிற இந்த டாடி மம்மிக்கு எப்படி  இந்த ஐடியா தோன்றியது?

“நானும் தாயால் மட்டுமே வளர்க்கப்பட்டவள். அதனால் அப்பா பற்றிய கவலைகள் இன்றி, எந்தச் சூழலிலும் என் மகனுக்கு மகிழ்ச்சியைத் தரமுடியும் என்று நிரூபிக்கவே இதைச் செய்தேன். கவலைப்பட்டுக் கொண்டிருப்பதால் நேர விரயம்தவிர வேறொன்றும் கிடைக்காது!”

- பரிசல் கிருஷ்ணா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்