அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200 ராமமூர்த்தி

ஆறுதல் ஏன் அவசியம்?

தோழியின் கணவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மீண்டு வந்துள்ளார். இன்னமும் பலவீனமாகத்தான் இருக்கிறார். நான் அடிக்கடி சென்று தோழிக்கு தைரியம் சொல்லிவிட்டு வருவேன். சென்ற வாரம் தோழியின் உறவினர்கள் வந்திருந்தனர். தோழியின் கணவரைப் பார்த்து சில வார்த்தைகள் பேசிவிட்டு, ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றுவிட்டனர். இத்தனைக்கும் அவர்கள் பலமுறை பெருமாளை தரிசனம் செய்தவர்கள்தான்..! எனக்கு என்னமோ அவர்களின் செயல் பிடிக்கவில்லை. தோழியுடன் பேசி தைரியம் கூறி, ஏதோ முடிந்த வேலைகளில் உதவி, ஆறுதலாக இல்லாமல்... கோயிலில் பலமணி நேரத்தை செலவிட்டுவிட்டு வந்து, சாப்பிட்டு ஊருக்குக் கிளம்பி விட்டார்கள். இவர்கள் எதற்காக நேரில் வர வேண்டும்? போனிலேயே நலம் விசாரித்து இருக்கலாமே... நோயில் படுத்திருப்பவர், நோயாளியை கவனிப்பவர் - இருவருக்குமே இதுபோன்ற நேரங்களில் தைரியமும் ஆதரவும்தான் வேண்டும். அதைச் செயல்படுத்தாமல் கோயிலுக்குப் போவதில் எந்த புண்ணியமும் இல்லையே!

- ஜி.சசிகலா ஸ்ரீரங்கம், திருச்சி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்