நமக்குள்ளே!

நேற்றைய நினைவுகளோடு, இன்று புதிதாகத் தொடங்குகிறோம். நாளை, நம் முன்னே நல்வாய்ப்புகளோடு காத்திருக்கிறது. அப்படித்தான் அவள் விகடனும் ஏராளமான கனவுகளோடு 19-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஒவ்வோர் இதழிலும் ஒவ்வொரு பக்கமும் வாசகிகளான உங்களை கண்முன் நிறுத்தியே உருவாக்கப்படுகிறது. எனினும், இந்த இதழ் சம்திங் ஸ்பெஷல்!

இந்த ஆண்டில் உங்கள் பங்கேற்பை மேலும் அதிகரிக்கவும் திட்டமிட்டமிருக்கிறோம். அதற்கு ஓர் உதாரணம்தான்... அவள் சேலஞ்ச்! சாதிக்க விரும்பும் பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் புதிய ரியாலிட்டி பகுதி இது. எந்த வயதிலும் சிறப்பான செயல்களில் நீங்கள் நிச்சயம் சாதிக்க முடியும் என்பதில் எங்களுக்கு நிறைந்த நம்பிக்கை உண்டு. உங்களை உற்சாகப்படுத்தி, கொண்டாடி, பிரபலமாக்க நாங்கள் தயாராகிவிட்டோம். சவாலைச் சந்திக்க நீங்கள் தயாரா?

நம்மில் பலரின் இலக்காக இருப்பது எடை குறைக்கும் மேஜிக்தான். இதோ... அவள் விகடனின் டயட் டூர் ஆரம்பமாகிவிட்டது. எந்த எதிர்விளைவும் இல்லாமல் முறையாக எடை குறைப்பது எப்படி? உங்களுக்கே உங்களுக்கான சிறப்பு உணவுத் திட்டத்தைத் திட்டமிடுவது எப்படி? எல்லாவற்றுக்கும் பதில் கிடைக்கும் இனி!

தன்னலம் கருதாது மக்கள் சேவைக்காகவே உழைக்கும் 12 பொன்மணிகள், இளம்வயதிலேயே சிகரம் தொட்ட 7 டீன் ஏஜ் கண்மணிகள்... இப்படி 19 பெண்கள், 19-ம் ஆண்டின் அவள் பிரபலங்களாக உங்களைச் சந்திக்கின்றனர் இந்த இதழில்.

முதல் புன்னகை... முதல் மழலை... முதல் நடை... என நம்மை ரசிக்கச் செய்யும் குட்டிச் செல்லங்கள் முதல், நம் வீட்டின் சீனியர் சிட்டிசன்கள் வரை அனைவரின் உடல்நலத்தையும் பராமரிக்க வழிகாட்டும் ஃபேமிலி ஹெல்த் வழிகாட்டியும் நம் இல்லங்களில் நலம் சேர்க்கும்.

உங்களையே நீங்கள் சக்தியாக உணரச் செய்யும் புதிய தொடர் ‘மனுஷி’. இது ஓரு புதிய ஆன்மிக அனுபவத்தையே அளிக்கும்.

ஹைலட்டாக இந்த இதழ் முதல் ‘அவள் கிளாஸிக்ஸ்’ பக்கங்கள் அணிவகுக்கின்றன. 19 ஆண்டு கால அவள் விகடன் இதழின் பொக்கிஷப் பக்கங்களை நினைவலைகளாக ரசிக்கலாம்.

அடுத்து வருகிற தீபாவளி சிறப்பிதழிலும், அதைத் தொடர்ந்து வருகிற இதழ்களிலும் புதிய பகுதிகளும் இனிய சர்ப்ரைஸ்களும் தொடரும்... காத்திருங்கள். நாங்களும் காத்திருக்கிறோம்... உங்கள் கருத்துகளுக்காக.

உரிமையுடன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்