இட்லிக்கடை - சிறுகதை

மனுஷி பாரதி, ஓவியம்: எஸ்.ஏவி.இளையபாரதி

யிற்றுக்கு மட்டும் எப்படித்தான் பசி என்கிற மணி மிகச்சரியாக அடித்துவிடுகிறதோ? எங்காவது இட்லிக் கடையில் சாப்பிடலாம் எனக் கண்களை மேயவிட்டபடியே போய்க் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட தெரு முழுக்க பெட்டிக்கடைகள், பானிபூரி கடைகள் நிறைந்திருந்தன. ஆனால், எல்லாமே பூட்டப்படுவதற்கு ஆயத்தமாக இருந்தன. ஒன்றிரண்டு டீக்கடைகளிலும் ஷட்டரை இழுத்து மூடிக்கொண்டிருந்தார்கள். மீன்குழம்புடன், மெத்தென்ற இட்லிக்கு நாக்கு ஏங்கிக்கொண்டிருந்தது.

அஜந்தா சிக்னல் வளைவில் மிக உயர்ந்த ஸ்டார் ஹோட்டல் புதிதாக முளைத்திருந்தது. பத்து வருடத்துக்கு முன்பு அங்கே ஒரு திரையரங்கம் இருந்ததாக நினைவு. அஜந்தா சிக்னல் என்ற பெயரும்கூட, அஜந்தா தியேட்டர் நினைவாக இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
 
அஜந்தா தியேட்டர் இப்போது அதிதி ஸ்டார் ஹோட்டலாக மினுக்கிக்கொண்டிருக்கிறது. அதிதிக்கு எதிரில் புதிதாக முளைத்த ஷெண்பகா ஸ்டார் ஹோட்டல் நீச்சல் குள வசதியுடன் பிரமாண்டமாக நின்றுகொண்டிருக்கிறது. விருது விழாவுக்கு வந்து நிற்கும் ஹாலிவுட் நடிகையின் தோரணை ஷெண்பகா ஹோட்டலைப் பார்க்கும்போதெல்லாம் வரும் எனக்கு. என்றைக்காவது ஒருநாள் இந்த ஹோட்டல் அறையில் தங்கி, அங்குள்ள ரெஸ்டாரன்ட்டில் முள்ளுக்கரண்டியால் சிக்கன் அல்லது மீனைக் கொத்தித் தின்று பசியாற வேண்டும் என்பது என்னுடைய சின்னஞ்சிறு ஆசை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்