செப்டம்பர் என்றாலே ஃபெஸ்டம்பர்தான்!

NIT Festசி.ய.ஆனந்தகுமார், ஹ.ச.ஷஃபியுல்லா, படம்: என்.ஜி.மணிகண்டன், மு.சாருமதி

செப்டம்பர் மாதம் வந்தாலே திருச்சி மாணவர்களுக்கு திருவிழாதான். திருச்சி என்.ஐ.டி-யில் நடக்கும் `ஃபெஸ்டம்பர்’... நாடு முழுவதிலும் உள்ள 500 கல்லூரிகளில் இருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொள்ளும் கல்ச்சுரல் ஃபெஸ்டிவல்!

கடந்த 42 ஆண்டுகளாக நடைபெறும் இந்தக் கலைவிழா, இந்த ஆண்டு வயலின் வித்வான் அம்பி சுப்ரமணியன், பிந்து சுப்ரமணியன் இசையுடன் தொடங்கியது. கிழக் கத்திய, மேற்கத்திய நடனப் போட்டியான கோரியா நைட், இடிஎம் இசை நிகழ்ச்சிகள், கிகாஹெர்ட்ஸ் மற்றும் நியூயார்க் பெண் களின் ராக்நைட் கச்சேரி, டாக்டர் செளமியா மற்றும் பாடலாசிரியர்  ரையாவின் இசை நிகழ்ச்சி, நாக்பூர் த்ரில் வீராவின் தீ நடனம், சக்கர நடனம், ஜக்ளிங் போன்றவை பார்வையாளர்களைக் கவர்ந்தன. அதோடு, டான்ஸ், சிங்கிங், ஆா்ட், போட்டோஃகிராபி என மாணவர்களின் திறமைகளுக்கு சவால்விடும் போட்டிகள் கலக்கல் ரகம். 

பாஞ்சாலி சபதத்தை நடனமாக ஆடிய கோவை குமரகுரு பொறியியல் கல்லூரி மாணவர்களும், ஆங்கிலப்பாடலுக்கு ஆடிய திருச்சி ஜமால் முகமது கல்லூரி மாணவர்களும் பாராட்டுகளை அள்ளினர்.  

`மனித குல மகிழ்ச்சிக்கு பெரிதும் வித்திடுவது அன்பா... அறிவா?’ எனும் தலைப்பிலான பட்டிமன்றத்துக்கு நடிகர் எஸ்.வி.சேகர் நடுவராக இருந்தார். ‘அறிவால் உயர்ந்த இடங்களுக்குச் சென்ற பலர், அன்பு இல்லாததால் பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பிவைக்கும் நிலை நாட்டில் அதிகரித்துள்ளது.  அன்பின் மூலம்தான் இந்த உலகத்தில் எதையும் சாதிக்க முடியும் அதனால் அன்புதான் மனித குல மகிழ்ச்சிக்கு பெரிதும் வித்திடுகிறது” எனத் தீர்ப்பளித்தார்.

 வார்த்தை விளையாட்டு, சகலகலா வல்லன், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, காற்றோடு கதை பேசு, குறளோவியம் உள்ளிட்ட போட்டிகள் என்.ஐ.டி-யில் எவ்வளவு ‘தமிழ்’ என  வியக்க வைத்தன. ஃபெஸ்டம்பரின்  ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தஞ்சை சாஸ்த்ரா கல்லூரியும், இரண்டாவது பரிசை திருச்சி என்.ஐ.டி-யும் கைப்பற்றின.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்