முதல் புன்னகை... முதல் மழலை... முதல் நடை!

குழந்தைகள் நலம்டாக்டர் கல்பனா, குழந்தைகள்நல நிபுணர் படம்: சி.சுரேஷ் பாபு

குழந்தைகளை, ஒரு நந்தவனத்தில் இருக்கும் செடிகளில் உள்ள பூக்களுடன் ஒப்பிடலாம். எத்தனை விதமான செடிகள் இருந்தாலும், பூக்கள் இல்லையென்றால் அந்த நந்தவனம் அழகு பெறாது, வெறும் வனமாகத்தானே இருக்கும்! குழந்தை இருக்கும் வீட்டின் குதூகலத்தை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. அதன் முதல் அழுகை, முதல் புன்னகை, முதல் மழலை, முதல் நடை என ஒவ்வொன்றும் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துபவை!

பூங்கொத்து போன்ற நம் மழலையின் முகம் லேசாக வாடினாலே, மனம் பதைத்துப்போகிறோம். அவர்களுக்குச் சிறு உடல்நலக் குறைவென்றாலும் ‘என்னாச்சோ, ஏதாச்சோ’ என்று தவிக்கிறோம். பச்சிளம் குழந்தைகளைப் பராமரிப்பதில்தான் எத்தனைக் குழப்பங்கள்! ‘வயித்தால போனால், வசம்பைக் கட்டு’, ‘சளி பிடிச்சா சாம்பிராணி புகை போடு!’ என்று பாட்டிமார்களிடம் இருந்து உத்தரவுகள் வரும். ‘அச்சச்சோ... அதெல்லாம் செய்யக்கூடாது. சாம்பிராணி புகை போடக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க!’ என்று நவீனப் பெண்மணிகள் பதறுவார்கள். இவற்றில் எது எதெல்லாம் சரி? எது எதெல்லாம் தவறு? நம் குட்டிப் பாப்பாவைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள பிராக்டிகல் டிப்ஸ், இதோ...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்