``அன்பும் அக்கறையும்தான் என் வாழ்க்கையே!” - சத்யா

மருத்துவ சேவைபா.ஜெயவேல், படம்: தே.அசோக்குமார்

ந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்ட கிருஷ்ணம்மாள்-ஜெகநாதன் தம்பதியின் மகள்தான் சத்யா. செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் மருத்துவர். இங்குள்ள எளிய மக்களுக்கு தினமும் தன் வீட்டிலிருந்து உணவு எடுத்துச் செல்கிறார். ஏழைக் குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்கிறார். படிக்க முடியாத சூழலில் வளரும் குழந்தைகளை தொழில் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புகிறார். அப்படி சில மாணவர்கள் தஞ்சாவூரில் உள்ள நம்மாழ்வாரின் குறிஞ்சிப் பண்ணையில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார்கள். சாதனைகள், விருதுகள் சூழ வாழ்ந்தாலும், ஆபரணங்களைக்கூட தவிர்க்கும் எளிமையே இவரது அடையாளம்!

“அண்ணனும் நானும் சின்ன வயசுல இருந்தே அப்பா - அம்மாவைப் பிரிந்துதான் வளர்ந்தோம். அப்பாவைச் சந்திக்கும்போதெல்லாம் ‘எப்பப்பா என்னோட இருப்பீங்க’னு கேட்பேன். ‘ஏழைங்களோட கஷ்டம் எப்ப தீருமோ, அப்ப உன்கூட இருப்பேன்’னு சொல்வார். ‘இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள ஏழைங்க பிரச்னையெல்லாம் தீரணும்... அப்பா என்கூட இருக்கணும்’னு சாமிக்கிட்ட வேண்டிக்குவேன். ‘நம்ம நாலு பேர் மட்டும் குடும்பம் கிடையாது. இந்த உலகமே நம்ம குடும்பம்தான்’னு அப்பா அடிக்கடி சொல்றதுதான், இப்போ என் வாழ்க்கையாகி இருக்கு.
இங்கு பச்சிளம் குழந்தை மருத்துவராகச் சேர்ந்தபோது, குழந்தைகளைப் பாதுகாக்க சரியான உபகரணங்கள்கூட இல்லை.

குழந்தைகள் இறப்பு விகிதம் 4% ஆக இருந்தது. அரசு நிதிஉதவி கிடைக் காததால், படாக் மரப் பலகைகளால் செய்யப்பட்ட பெட்டியில் பல்பு வைத்து ‘இன்ஃபேன்ட் வார்மர்’ உபகரணத்தைச் செய்தோம். இப்படி 40 வார்மர்களைக் கொண்டு குழந்தைகளைக் காப்பாற்றினோம். என் சகோதரர் பூமிகுமார், குழந்தைகள் மனநல மருத்துவர். அவரும் திருமணம் செய்துக்கல. கம்போடியாவில் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தை களுக்கு மருத்துவச் சேவை செய்து வர்றார்.

ஒரு குழந்தை இறந்தாலும் மனசு ஒடிஞ்சுடும். தீபாவளி, பொங்கல்னு எல்லா கொண்டாட்டங்களும் எனக்கு மருத்துவமனையில்தான். இரவு 11 மணிக்கு வார்டு ரவுண்ட்ஸ் வந்தாதான் எனக்குத் தூக்கமே வரும். அந்த அன்பும் அக்கறையும்தான் வாழ்க்கை எனக்கு!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்