``ஒரு குடும்பமாக இயங்குகிறோம்!’’ - பர்வதவர்த்தினி

குழந்தைத் தொழிலாளர் சேவைசண்.சரவணக்குமார், படம்: வி.சதிஷ்குமார்

துரை அருகே உள்ள மிகவும் பின்தங்கிய 10 கிராமங்களில்  ‘லிட்டில்ஸ்’ அமைப்பின் மூலம், 400-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச மாலை நேர வகுப்புகள் அளிக்கிறார் பர்வதவர்த்தினி. ஈஸி இங்கிலீஷ், எளிய கணிதம், அழகான அறிவியல், கதைசொல்லி என்று கலக்குகிறார்கள் இம்மாணவர்கள்!

‘‘2002-ல் ஒரு ஹோட்டலில் வேலைசெய்த சிறுவனைப் பார்த்தேன். அவனைப் பார்த்ததும் குழந்தைத் தொழிலாளர் பற்றிய பல கேள்விகள் என்னைத் துரத்த, அதற்குத் தீர்வாகவே ‘லிட்டில்ஸ்’ குழந்தைகள் மையத்தை 22 குழந்தைகளுடன் ஆரம்பித்தேன். ‘வெளிநாட்டு, உள்நாட்டு நிதி எதுவும் பெறக்கூடாது’ என்கிற உறுதியுடன், நண்பர்கள் தரும் சிறுதொகைகளில்தான் செயல்படுகிறது இந்த அமைப்பு. வசதியற்ற கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணங்களை நல் உள்ளங்களின் உதவியால் கட்டுகிறோம். பதிலுக்கு, அந்த மாணவர்கள் எங்கள் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கிறார்கள். இப்படி ‘லிட்டில்ஸ்’ ஒரு குடும்பமாகவே இயங்குகிறது.

தீயணைப்புத் துறை, வழக்கறிஞர் என்று எங்கள் மாணவர்கள் பணிவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். முதல் செட் மாணவி ஒருவர் எம்.எஸ்ஸி., எம்.ஃபில் படித்து விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். இங்கும் மாலை நேர வகுப்பு எடுக்கிறார். பெற்றோரை இழந்த ஒரு பெண் இன்று பிரபல ஐ.டி நிறுவனத்தில் மென்பொறியாளர். பத்தாம் வகுப்பில் ஃபெயில் ஆனதால் ‘சுமங்கலி’ திட்டத்தில் பஞ்சாலைக்குச் சென்ற ஒருவரை மீட்டுப் படிக்க வைத்தோம். இன்று எம்.ஏ., பி.எட் படித்து ஆசிரியராக இருக்கிறார் அவர். குழந்தைத் தொழிலாளியாக இருந்த சிறுவன், இன்று எம்.எஸ்ஸி., பி.எட் முடித்து ஆசிரியராக இருக்கிறார். இங்கும் வகுப்பு எடுக்கிறார்.

எங்கள் குழந்தைகள் இயற்கை ஆர்வலர்களாக, நல்ல சிந்தனை யாளர்களாக, தேடல் மிகுந்த வாசிப் பாளர்களாக, ஜாதி, மதங்களைக் கடந்து சக மனிதனின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு வாழும் மனிதர்களாக ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை யோடு செயல்படுகிறோம்!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்