``உழைப்புதான் உங்களுக்குத் துணை!’’ - உமா ராஜ்

தொழில்முனைவு சேவைஆர்.வைதேகி, படம்: மீ.நிவேதன்

ண்டதையும் கற்றவர் பண்டிதர் ஆகிறார். அப்படிக் கற்றதை அடுத்தவருக்கும் அளிப்பவரே மனிதராகிறார். அப்படியொரு மனுஷிதான் உமா ராஜ். 3 ஆயிரத்துக்கும் அதிகமான பெண் தொழில் முனைவோரை உருவாக்கிய பெருமைக்கு உரியவர். சென்னை, கே.கே.நகரில் உள்ள உமாவின் சுஹா தொண்டு நிறுவனத்தில் எப்போதும் பெண்கள் கூட்டம்!

``படிப்பு, திறமைங்கிறதை எல்லாம் மீறி, இன்னைக்கு ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருளாதார சுதந்திரம் ரொம்பவே முக்கியம். கடைசி வரை அது மட்டும்தான் அவளுக்குத் துணை. படிச்சிருப்பாங்க... வேலையில இருந்திருப்பாங்க. கல்யாணத்துக்குப் பிறகு எல்லாத்தையும் விட்டுட்டு முழுநேர இல்லத்தரசியாகி இருப்பாங்க. ஆர்வம் இருக்கும். ஆனா, என்ன பண்றதுனு தெரியாது. அப்படி வர்றவங்களைத் தயார்படுத்தறதுதான் சிரமம்’’ என்கிற உமா ராஜ், அப்படி சிலரை உருவாக்கிய கதைகளையும் முன்வைக்கிறார்.

“ரெண்டு தோழிகள் வந்தாங்க. ஏதாவது பிசினஸ் பண்ணியே ஆகணும்னாங்க. தையல் தெரியுமா, பொம்மை செய்யத் தெரியுமானு வரிசையா எல்லாத்தையும் விசாரிச்சேன். தெரியாதுன்னாங்க. அத்தனை வயசுக்கு மேல புதுசா ஒரு விஷயத்தைக் கத்துக்கிட்டு பிசினஸ் பண்ணவும் அவங்க தயாரா இல்லை. ‘இத்தனை வருஷங்களை வேஸ்ட் பண்ணிட்டோம்... சமையக்கட்டுலயே எங்க வாழ்க்கை போயிடுச்சு... சமைக்கிறதையும் சாப்பிடறதையும் தவிர வேற ஒண்ணும் தெரியாது’ன்னாங்க. 

சமைக்கத் தெரியும்கிறதை அவங்க ஒரு திறமையாவே பார்க்கலை. ‘என்னவெல்லாம் சமைப்பீங்க’னு கேட்டபோது பிரியாணிலேருந்து பீட்சா வரை தெரிஞ்சு வெச்சிருந்தாங்க. `வீட்டுக்குள்ள சமைக்கிறதையே கொஞ்சம் அதிகமா சமைச்சு பிசினஸா பண்ணுங்க’னு ஐடியா கொடுத்தேன். சமைக்கிறதை ஒரு பிசினஸா பண்ண முடியுமாங்கிற தயக்கத்தோடவே போனவங்க, இன்னிக்கு பிரியாணி பிசினஸ்ல கலக்கிட்டிருக்காங்க...’’ என்கிற உமா, தினம் ஒரு புதிய கலையையோ அல்லது தொழிலையோ தேடித் தேடிக் கற்றுக்கொள்கிறார். அடுத்தவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதீத அக்கறை கொண்ட உமா, அதன் பிரதிபலிப்பாக சணல் பை மற்றும் பொருட்கள் தயாரிப்பில் தீவிரப் பயிற்சி அளிக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்