‘`கதை சொல்லி குழந்தைகள் மனசைப் பிடிக்கணும்!’’ - ஷோபா பிரேம்குமார்

கதா சேவைகே.ஆர்.ராஜமாணிக்கம், படம்: டி.சின்னராஜ்

குழந்தைகளுக்குக் கதை சொல்வதையே சேவையாகச் செய்துவருகிறார், குன்னூரைச் சேர்ந்த ஷோபா பிரேம்குமார். அறிவியல் ஆசிரியையான இவர், பள்ளிகளில் தான் இலவசமாக நடத்தும் ஸ்டோரி டெல்லிங் வொர்க்‌ஷாப்புக்கு கைம்மாறாகப் பெறுவது, குழந்தைகள் பதிலுக்குச் சொல்லும் கதைகளே என்று சொல்லிச் சிரிக்கிறார்!

``நான் சயின்ஸ் டீச்சர். அறிவியல் கூறுகளை மாணவர்கள் மனசுல பதியவைக்கணும்னா, அவற்றை ஒரு கதையோடு பொருத்திச் சொல்லணும். அந்தக் கதையை நானே உருவாக்குவேன். இதையே, எம்.ஃபில் ஆய்வுக்கும் கருவா எடுத்துக்கிட்டேன். சில வருஷங்கள்  ஒரு பள்ளியில் வேலை செய்துட்டு, குடும்பச் சூழ்நிலை காரணமா வேலையை விட்டுட்டேன். வீட்டுல இருந்தாலும் சும்மா இருக்கக்கூடாதுனு,  பெங்களூரில் உள்ள ‘கதாலயா’விலும் சென்னையிலும் ஸ்டோரி டெல்லிங் கத்துக்கிட்டேன். ஆரம்பத்தில் நண்பர்களோட பள்ளி, தெரிந்த  பள்ளினு கதை சொல்ல ஆரம்பிச்சேன். ஒரு ஸ்கூல்ல போய் குழந்தைங்களுக்குக் கதை சொல்லும்போது, எப்படி கதைக்குள்ள பாடத்தைக் கொண்டுவர்றதுனு, அங்க உள்ள டீச்சர்களுக்கும் சொல்லிக்கொடுப்பேன். குழந்தைகள்கிட்ட அட்வைஸா எதையும் சொல்ல மாட்டேன். பெண் குழந்தைகளோட பிரச்னைகளை சரிசெய்றதுக்கும்கூட எனக்குக் கருவி கதைதான்.

குழந்தைகளைக்  கவர்றதுக்கு விலங்குகள், பறவைகள்னு நானே பொம்மைகள் செய்து பயன்படுத்துறேன். அவங்க மனசைக் கன்ட்ரோல் பண்ணி, நான் சொல்ற கதையில் கவனம் செலுத்த வைத்து, அப்புறம் அவங்களை கற்பனை பண்ணவைப்பேன். கதைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு அந்தந்த பாத்திரமா மாறி நாம கதை சொல்லும்போது, குழந்தைங்களோட  கவனிப்பில் இருந்து உணர்ச்சி வெளிப்பாடுவரை, கதை சொல்றவங்க கட்டுப்பாட்டுக்கு வந்துடுவாங்க. கதை சொல்லி, குழந்தைங்க மனசுல இடம் பிடிச்சதுக்கு அப்புறம், நீங்க எந்த விஷயம் சொன்னாலும் அவங்க ஏத்துக்குவாங்க. குழந்தைகளோட எந்தப் பிரச்னையையும் கவுன்சலிங் மூலம் சரிபண்ணிடுவேன்.

கதைகள் மூலம் குழந்தைகள்கிட்ட நல்ல பண்புகளை வளர்க்கலாம். என்கிட்ட கதை கேட்ட பெண்கள், அவங்க குழந்தைகளுக்கு அந்தக் கதைகளைச் சொல்றதா போன் பண்ணிச் சொல்றாங்க. மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்