``வழிகாட்டும் ஒளியாகி மகிழ்கிறோம்!’’ - பிரேமா - ரேவதி - சுஜாதா

தனித்து வாழ்வோருக்கு சேவைஆர்.வைதேகி

சென்னையைச் சேர்ந்த பிரேமா, ரேவதி மற்றும் சுஜாதா என மூன்று தோழிகளால் நடத்தப்படும் ‘வழிகாட்டும் ஒளி’, சமுதாயத்தில் தனித்து வாழும் பெண்களுக்கானது.

``காதல் திருமணம்தான். ஆனாலும், 14 வருஷங்களுக்கு மேல அதைத் தொடர முடியலை.  அதுலேருந்து மீள்றது பெரிய வலியா இருந்தது, தற்கொலை முயற்சி வரை போய் காப்பாற்றப்பட்டேன். அர்த்தமில்லாமப் போன வாழ்க்கையைப் பத்திக் கவலைப்படறதுக்குப் பதிலா, அதை அர்த்தமுள்ளதாக்க யோசிச்சேன். ஆதரவில்லாத குழந்தைங்களோட நலனுக்காக நேசம்னு ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிச்சேன். ஆண் துணை இல்லாத பெண்களுக்காக ‘வழிகாட்டும் ஒளி’னு ஒரு அமைப்பையும்  தொடங்கி னேன். தனி ஒருத்தியா தொடங்கின இந்த அமைப்புல இன்னைக்கு   50-க்கும் மேலான பெண்கள் இருக்காங்க...’’ - பிரேமா அறிமுகம் கொடுக்க, அவருடைய தோழிகள்  தொடர்கிறார்கள்.

``பிரேமாவோட அறிமுகம் கிடைச்சப்போ முதல்முறை பேசற மாதிரி இல்லாம, ரொம்ப காலம் பழகினவங்ககிட்ட பேசற மாதிரி இருந்தது. என் திருமண வாழ்க்கையிலயும் நிம்மதி இல்லை. போராட்டத்துக்குப் பிறகு விவாகரத்து வாங்கிட்டு ஒரே மகனோட தனியே வந்தேன்.
பள்ளிக்கூடத்துல தலைமை ஆசிரியர் வேலையில இருந்தாலும் ஏதோ ஒரு வெறுமை துரத்தியது. அவங்களோட கதையைக் கேட்டதும், நான் தனிமனுஷி இல்லைங்கிற தெளிவு கிடைச்சது...’’ என்கிறார் ரேவதி.

‘’ரெண்டு சின்னக் குழந்தைங் களோட நடுராத்திரியில வீட்டை விட்டுத் துரத்தப்பட்டவள் நான். பிரேமாவையும் ரேவதியையும் சந்திச்சதும் கொஞ்சமும் யோசிக்காம, என்னையும் இணைச்சுக்க சொல்லிக் கேட்டேன். ரெண்டு பிள்ளைங்களைப் படிக்க வைக்கவும் எனக்கான வாழ்க்கையை வாழவும் தைரியத்தைக் கொடுத்தது வழிகாட்டும் ஒளி...’’ - தனக்கு வழி பிறந்த கதையைப் பகிர்கிறார் சுஜாதா.

இந்த அமைப்பின் மூலம் தனித்து வாழ்கிற பெண்களுக்கு சுயதொழில் பயிற்சிகள் கொடுக்கிறார்கள். அவர்களுடைய பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு உதவுகிறார்கள். வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்கிறார்கள். சட்ட ஆலோச னைகளுக்கும் வழிகாட்டுகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்